அம்மன் அவதாரம் எடுத்த நடிகை ஷகிலா மகள் - வைரலாகும் புகைப்படங்கள்..!

By Thahir Jun 02, 2022 03:57 AM GMT
Report

ஷகிலாவின் வளர்ப்பு மகள் மிலா அம்மன் கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

80-90-களில் தென்னிந்திய சினிமாவின் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஷகிலா. தமிழ் சினிமாவில் சப்போர்ட்டிங் கேரக்டரில் தனது திரைப்பயணத்தை தொடங்கிய ஷகிலா அதன்பிறகு குடும்ப சூழ்நிலை காரணமாக கவர்ச்சிப்படங்களில் நடிக்க தொடங்கினார்.

அம்மன் அவதாரம் எடுத்த நடிகை ஷகிலா மகள் - வைரலாகும் புகைப்படங்கள்..! | Daughter Of Actress Shakila Who Incarnated Goddess

இவர் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த காலத்தில், மலையாள சினிமாவில் இரு துருவங்களாக மம்முட்டி மோகன்லால் இருவருக்கும் டஃப கொடுக்கும் அளவுக்கு படங்களை வெளியிட்டதாக கூறப்படுகிறது.

தற்போது கவர்ச்சிக்கு குட்பை சொல்லிவிட்ட ஷகிலா காமெடி மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடிக்க தொடங்கியுள்ளார்.

தற்போதுவரை திருமணம் செய்துகொள்ளாத ஷகிலா, மிளா என்ற குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

தற்போது வளர்ந்து பெரியவராகிவிட்ட மிளா ஆடை வடிவமைப்பாளராக இருந்து வரும் நிலையில், அவ்வப்போது சீரியலிலும் நடிக்க தொடங்கியிருக்கிறார்.

சிறுவயதில் ஹிஷாம் என்ற ஆணாக இருந்த மிளா தனது 9 வயதில் தனக்குள் இருந்த பெண்மையை உணர்ந்து பெண்ணாக மாறியதை தொடர்ந்து அவரை ஷகிலா தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

அம்மன் அவதாரம் எடுத்த நடிகை ஷகிலா மகள் - வைரலாகும் புகைப்படங்கள்..! | Daughter Of Actress Shakila Who Incarnated Goddess

ஷகிலாவும் மிளாவும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருந்து வரும் நிலையில், அவ்வப்போது இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படத்தை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் பிக்பாஸ் சீசன் 5-ல் நமீதா மாரிமுத்துவுக்கு முன்பு பங்கேற்க இருந்தது மிளாதான். ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் பங்கேற்காத நிலையில்,

அவருக்கு பதிலான நமீதா மாரிமுத்து பங்கேற்றார்.திருநங்கைகள் சார்பாக நமீதா மாரிமுத்து பிக்பாஸ் சென்றது பெருமையாக இருக்கிறது என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் மிளா தற்போது அம்மன் வேடத்தில் மேக்கப் செய்து புதிய போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இந்த படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.