கொலை செய்வது எப்படி? வீடியோ காலில் அறிவுரை - காதலன் பேச்சை கேட்டு தாயை கொன்ற காதலி!!
அரியானாவில் காதலுக்கு தடையாக இருந்த தாயாரை அவரது மகளே தூக்க மாத்திரை கொடுத்து கொன்ற கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியானா பரிதாபாத் மாவட்டத்தில் வசிக்கும் 16 வயது இளம்பெண்ணும், 18 வயது வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். அவர்கள் தங்களின் பெற்றோர்களுக்கு தெரியாமல் பல இடங்களுக்கு சென்று ஜாலியாக அவர்கள் காதலை வளர்த்து வந்துள்ளனர்.

மேலும் பார்க், சினிமா என உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் அந்த பெண்ணின் தாய்க்கு இவர்களது காதல் விஷயம் தெரியவர, காதலை கைவிடுமாறு மகளை கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த காதலர்கள் தாயாரை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர். காதலரின் ஆலோசனை படி, தூக்க மாத்திரைகளை வாங்கி வந்த காதலி, வீடியோ காலில் ஆலோசனை கேட்டு கேட்டு ஜூஸில் மாத்திரையை கலந்து அவரது தாய்க்கு கொடுத்து கொலை செய்துள்ளார்.

இதில் தாயாரோ தூங்கிய நிலையிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை மீட்டு காதலர்களை கைது செய்தனர்.
இலங்கையில் முதன் முறையாக பயன்படுத்தப்பட்ட அதிக சக்திவாய்ந்த வெடிபொருள்! ஈஸ்டர் வழக்கில் ஜமைக்காவில் இருந்து வழங்கப்பட்ட சாட்சியம் IBC Tamil
13 வயது சிறுமி மீது அத்துமீறல் : சந்தேகநபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை IBC Tamil