பாவக்கதைகள் பட பாணியில் கர்ப்பிணி மகளை கொலை செய்த கொடூர தந்தை! என்ன நடந்தது?
ஜார்க்கண்டில் மகள் வேறு சாதியை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டதால், அவரது தந்தையே அவரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்டின் தன்பாத்தில் வசிக்கும் ராம்பிரசாத் என்பவர் தனது 18 வயதான மகள் மற்றும் மனைவியோடு வசித்து வந்தார். இந்த நிலையில் அவரது மகள், வேறு சாதியை சேர்ந்த நபரை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தந்தை, மகளை பழிவாங்க திட்டம் தீட்டியுள்ளார். பாவக்கதைகள் திரைப்படம் போல், மகளை அழைத்து வந்து கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.
அந்த வகையில் கடந்த வாரம் கர்ப்பிணியாக இருந்த மகளை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அங்கு தனியாக அவரை நிலத்திற்கு கூட்டி சென்று ஆள் இல்லாத நேரத்தில் கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை மீட்டு, தந்தையை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.