உணவு தர மறுத்த மருமகளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற 76 வயது மாமனார் - பரபரப்பு சம்பவம்
மராட்டிய மாநிலம், தானே மாவட்டம், ரபோடி பகுதியைச் சேர்ந்தவர் காஷிநாத் பாண்டுரங் பாட்டீல் (76). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்த இரண்டு மகன்களுக்கும் திருமணமாகி பேர பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் காஷிநாத் பசியோடு இருந்துள்ளார்.
இதனையடுத்து மருமகளிடம் சாப்பாடு கேட்டுள்ளார். ஆனால், மருமகள் உணவு மற்றும் தேநீர் கொடுக்கவில்லை. இதனால், மாமனாருக்கும், மருமகளுக்கும் பயங்கர சண்டை வந்துள்ளது.
இந்த சண்டை முற்றியதால், ஆத்திரம் அடைந்த காஷிநாத் தன் கைத்துப்பாக்கியை எடுத்து மருமகளை பார்த்து பட்.. பட்டென சுட்டுள்ளார்.
மருமகளின் அலறல் சத்தம் கேட்டு பிள்ளைகளும், அக்கம், பக்கத்தினரும் ஓடி வந்தனர். அப்போது, காஷிநாத் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதனையடுத்து மருமகளை அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து காஷிநாத்தின் மற்றொரு மருமகள் போலீசில் புகார் கொடுத்தார்.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த மருமகள் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள மாமனார் காஷிநாத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.
