மாமியாரின் சகோதரிக்கு 60% கல்லீரல் தானம் - உயிரிழந்த மருமகள்!
உறவினருக்குக் கல்லீரல் தானம் செய்த பெண் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கல்லீரல் தானம்
மங்களூரைச் சேர்ந்த கல்லூரி விரிவுரையாளர் அர்ச்சனா. இவர் 60% கல்லீரலை மாமியாரின் சகோதரிக்கு தானம் செய்துள்ளார். கல்லீரல் தேவைப்பட்ட முதியவர் அர்ச்சனாவுக்கு நெருக்கமானவர் என கூறப்படுகிறது.
அவரது ஆரோக்கியத்தில் கவலை இருந்ததால் அர்ச்சனா இந்த தானத்தைச் செய்ய முன்வந்ததாக சொல்லப்படுகிறது. இச்சம்பவம் இணையத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண் மரணம்
இதுதொடர்பாக வெளியான வீடியோவில் கல்லீரல் அறுவை சிகிச்சைக்குப் பிறகு அந்த பெண்ணுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டதாகவும், பேசவும் சாப்பிடவும் முடியாமல் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
#Archanakamat
— ?????? (мσ∂ιʝι кα ραяιναя) (@Gururaj1972) September 21, 2024
ನಿಮ್ಮ್ ಆತ್ಮ ಆ ಭಗವಂತನಾ ಮಡಿಲಲ್ಲಿ ಚಿರಶಾಂತಿ ಅನುಭವಿಸಲಿ ? pic.twitter.com/j3IzuMeiZj
மேலும், பல உறுப்புகள் செயலிழந்து இதயநோயில் அவர் இறந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.