என்ன ஆச்சுனு தெரியல..மாமியாருக்காக அழுத மருமகள்- இணையத்தில் Video வைரல்!
மகா கும்பமேளாவில் மாமியாருக்காக அழுத மருமகளின் வீடியோ குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மகா கும்பமேளா
உத்தரப்பிரதேசத்தில் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா நடத்தப்படும். இது மிகவும் பிரசித்தி பெற்றது. ஜனவரி 12ஆம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது.
இந்த விழாவில் முனிவர்கள், துறவிகள், பாபாக்கள், அகோரிகள் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பொது மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வர். அதன்படி , இந்தாண்டு மிகவும் பிரம்மாண்டமாக மகா கும்பமேளா திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
வீடியோ
இந்த நிலையில் மகா கும்பமேளாவில் மாமியாருக்காக அழுத இளம்பெண் ஒருவர் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், கும்பமேளாவிற்குத் தனது மாமியாருடன் இளம்பெண் வந்துள்ளார். அப்போது ஆற்றில் குள்ளக் சென்ற போது கூட்டத்தில் சிக்கி காணாமல் போய் விட்டதாகக் கண்ணீருடன் கூறுகிறார்.
இந்த காட்சியைக் கண்ட அருகி;ல் இருந்தவர்கள் இளம்பெண்ணுக்கு ஆறுதல் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.