மாமியரை கம்பால் மண்டையிலே அடித்துக் கொலை செய்த மருமகள்..!
மருமகள் தனது மாமியாரை மண்டையில் கம்பால் தாக்கியதில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மாமியாரை கம்பால் தாக்கிய மருமகள்
நெல்லை மாவட்டம் துலுக்கர்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகவேல் (63). இவர் துலுக்கர்குளம் ஊராட்சியில் துணைத் தலைவராக உள்ளார். இவரது மனைவி சீதா ராமலட்சுமி (58).
இந்த தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மகள் திருமணம் முடிந்து கணவர் வீட்டில் வசித்து வருகிறார். இவர்களது மகன் ராமசாமிக்கு மகாலட்சுமி (27) என்னும் மனைவியும், இரு குழந்தைகளுக்கும் உள்ளனர்.
சீதா ராமலட்சுமிக்கும், அவரது மருமகள் மகாலட்சுமிக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுவது வழக்கம். அதில் கோபத்தில் இருந்த மகாலட்சுமிக்கு, தன் மாமியார் சீதாராமலட்சுமி நேற்று காலையில் துாங்கி கொண்டு இருக்கும்போது அவரை சராமாரியாக கம்பால் தாக்கியுள்ளார்.
தொடர்ந்து அவர் கழுத்தில் கிடந்த ஒரு செயினையும் பறித்துச் சென்றுவிட்டார். இதில் படுகாயம் அடைந்த சீதா ராமலட்சுமி, திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழப்பு
இந்த நிலையில் சிகிச்சைப் பலன் அளிக்காமல் சீதா ராமலட்சுமி இன்று காலை உயிர் இழந்தார். சீதபற்பநல்லுார் போலீசார் மகாலட்சுமியிடம் நடத்திய விசாரணையில், மாமியாரைப் பிடிக்காததால் அவர் துாங்கிக் கொண்டு இருக்கும் போது கொலை செய்யும் நோக்கத்துடன் மகாலட்சுமி கொடூரமாக தாக்கி உள்ளார்.
மேலும் தான் அதில் மாட்டிக் கொள்ளாமல் இருக்கவே மாமியார் கழுத்தில் கிடந்த 5 பவுன் செயினை மகாலட்சுமி பறித்ததும் தெரியவந்தது.
செயினை பறித்தால் போலீசார் திருட்டு வழக்காக இதை யோசிப்பார்கள் என்றே மகாலட்சுமி இதைச் செய்து உள்ளார் ஆனால் அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவின் வழியே சிக்கி கொண்டார். இதனைத் தொடர்ந்து இவ்விவகார்ததில் மகாலட்சுமியை போலீசார் கைது செய்துள்ளனர்.