மருமகளின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு கள்ளக்காதலியுடன் வந்த கணவர் - கத்தியால் குத்தி கிழித்த மனைவி - அதிர்ச்சி சம்பவம்
கோவை மாவட்டம், ஒண்டிப்புதூரைச் சேர்ந்தவர் நாராயணசாமி. இவருடைய மனைவி ராஜேஸ்வரி. நாராயணசாமி தச்சுதொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகனுக்கு திருமணம் ஆகிவிட்டது.
நாராயணசாமிக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனால் இவர்கள் இருவருக்குள்ளும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்திருக்கிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் மூத்த மகன் ராஜ்குமாரின் மனைவிக்கு நீலிக்கோணாம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு கோவில் மண்டபத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது, வளைகாப்பு நிகழ்ச்சிக்கு நாராயணசாமி, கள்ளக்காதலியை அழைத்து வந்துள்ளார். இதைப் பார்த்ததும் ராஜேஸ்வரி ஆத்திரம் அடைந்தார்.
இதைப் பார்த்த மகன் ராஜ்குமாரும் நாராயணசாமியிடம் வாக்குவாதம் செய்து திட்டி தீர்த்து அடிக்கச் சென்றுள்ளார். இதனால், உடனடியாக அங்கிருந்து கிளம்பிய நாராயணசாமி வீட்டிற்கு சென்றார்.
இதனையடுத்து, மனைவி ராஜேஸ்வரியும், மகன் ராஜ்குமாரும் வீட்டிற்க்கு வந்தனர். அப்போது, ராஜேஸ்வரியும், ராஜ்குமாரும் நாராயணசாமியிடம் மீண்டும் சண்டையிட்டனர். இதையெல்லாம் ஒரு பொருட்டாக நினைக்காத நாராயணசாமி அசால்ட்டா இருந்துள்ளார்.
அப்போது, ஆத்திரம் அடைந்த ராஜேஸ்வரியும், ராஜ்குமாரும் அருகில் இருந்த அரிவாளை எடுத்து நாராயணசாமியை சரிமாரியாக குத்தி வயிற்றை கிழித்தனர். அலறி துடித்த நாராயணசாமி மயங்கி ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார்.
இவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம், பக்கத்தினர் நாராயணசாமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், மருத்துவமனையில் நாராயணசாமி ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கணவனை அரிவாளால் வெட்டிய மனைவியையும், மகனையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கணவனை மனைவியும் மகனும் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.