iPadல் சார்ஜ் கம்மியா இருந்ததால் மாணவிக்கு தண்டணை கொடுத்த பள்ளி

Viral Photos
By Irumporai Jul 03, 2022 10:35 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

இங்கிலாந்தில், பள்ளிக்கு எடுத்து செல்லப்பட்ட iPad-ல் 97%க்கும் கீழாக சார்ஜ் இருந்ததால், மாணவிக்கு தண்டனை வழங்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

iPad-ல் சார்ஜ் குறைவாக இருந்ததால் தண்டனை

இந்தியாவை பொறுத்தவரை பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு புத்தகமும் நோட்டுகளும் தான் முக்கியமானவை. ஆசிரியர்கள் கொடுக்கும் வீட்டுப்பாடங்களை செய்யவிட்டால் நிச்சயம் தண்டனை உண்டு எனபதுதான் வரலாற்று உண்மை.

iPadல் சார்ஜ் கம்மியா இருந்ததால் மாணவிக்கு தண்டணை கொடுத்த பள்ளி | Daughter Given School Detention Charged Ipad

ஆனால் மேலை நாடுகளில் தற்போது புத்தகங்களும் நோட்டுகளும் மாணவர்களுக்கு கொடுக்கப்படுப்வதில்லை அவர்களுக்கு இந்த டிஜிட்டல் யுகத்திற்கு தகுந்தவாறு ipad கொடுக்கப்படுகிறது. அதில் தான் மாணவர்கள் தங்களுக்கு தேவையான குறிப்புகளை எடுப்பார்கள் .

கொந்தளித்த மாணவியின் தாய்

இந்த நிலையில் இங்கிலாந்தில் உள்ள ஒரு பள்ளியில் ipad 97% கீழ் சார்ஜ் இருந்ததால் மாணவிக்கு தண்டனை விதித்துள்ளனர். அந்த பள்ளிக்கு வரும் மாணவர்கள் கட்டாயம் 97 சதவீதம் சார்ஜ் செய்து  iPad எடுத்து வர வேண்டும் என்ற விதி உள்ளதாகவும். மாணவி தனது ipad- ல் 93% சார்ஜ் உடன் சென்றதால் அந்த மாணவிக்கு தண்டனை வழங்கியுள்ளது பள்ளி நிர்வாகம்.

பொதுவாக பள்ளிகளில் கொடுக்கும் தண்டணைகளை எந்த மாணவர்களும் பெரிதாக எடுத்துக்கொள்வது கிடையாது , அதே போல் அந்த மாணவியும் தண்டனையினை அபெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அப்படியே விட்டுவிட்டார்.

இது முட்டாள்தனமான செயல்

ஆனால் கொடுக்கப்பட்ட தண்டனையை செய்து முடிக்காவிட்டால் மீண்டும் கொடுக்கப்படும் என்று மின்னஞ்சல் மூலம் செய்தி அனுப்பியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவியின் தாயார்  தனது ட்விட்டர் பதிவில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவில் : என் மகள் பள்ளிக்கு வந்தபோது அவளது ஐபேட் 93% இருந்ததால் அவளுக்கு தண்டணை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து மின்னஞ்சல் அனுப்பிய பல்ளி நிர்வாகம் iPadகள் 97% க்கும் குறைவாக இருக்கக்கூடாது அல்லது மாணவர்கள் தண்டிக்கப்படுவார்கள் எனக் கூறியுள்ளனர்.

அவர்களின் இந்த விதிமுறையினை கேட்டு நான் பதட்டம் அடைந்துவிட்டேன். இதுபோன்ற முட்டாள்தனத்தை யாராவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? எனபதிவிட்டுள்ளார்.

மேலும் , இது தவறே இல்லாதபட்சத்திலும், தண்டனை கொடுக்கப்பட்டதாக மாணவியின் தாயார் தெரிவித்துள்ளார், இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.    

உங்களைத் திருமணம் செய்ய என்ன தகுதி வேண்டும்? மனம் திறந்த அமலா பால்!