மகள் - மகனை கொலை செய்து தந்தை தற்கொலை..விசாரணையில் வெளியான பகீர் தகவல்!

Chennai Crime Death
By Vidhya Senthil Oct 19, 2024 09:25 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

 மனைவி  உயிரிழந்த துக்கத்தில் பிள்ளைகளைக் கொன்றுவிட்டு கணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை 

சென்னை திருவெற்றியூரை சேர்ந்தவர் அருள். தையல்காரராக பணியாற்றி வந்தார். இவருக்கு அம்சா(42) என்ற மனைவியும் 2 பிள்ளைகள் உள்ளனர். இவரது மூத்த மகள் ரம்யா அரசு கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்தார். மகன் ராஜேஷ் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

daughter and father death

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். மேலும் இதற்காகச் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால் அம்சா சிகிச்சை பலனின்றி கடந்த 3 ஆம் தேதி உயிரிழந்தார்.

அம்சாவின் இறப்பு கணவர் அருள், பிள்ளைகள் ரம்யா, ராஜேஷை வெகுவாக பாதித்துள்ளது. இதனால் சில தினங்களாக மன அழுத்தத்தில் இருந்ததாகத் தெரிகிறது. மேலும் உறவினர்கள் அவர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளனர். இந்த சுழலில் ரம்யாவின் பாட்டி அவரது வீட்டிற்கு வந்துள்ளார்.

மாமியார், மருமகளுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை - தந்தை, மகன் முன் நடந்த கொடூரம்

மாமியார், மருமகளுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை - தந்தை, மகன் முன் நடந்த கொடூரம்

கதவு உள்பக்கமாகப் பூட்டியிருந்ததைக் கண்டு நீண்ட நேரம் தட்டிப் பார்த்துள்ளார். ஆனால் யாரும் கதவைத் திறக்காததால், சந்தேகமடைந்த பாட்டி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஜன்னல் கண்ணாடியை உடைத்து வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது விட்டில் உள்ள ஒரு அறையில் அருள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கணவர் தற்கொலை 

மேலும் பக்கத்தில் ரஷ்யாவும் அவரது சகோதரர் ராஜேஷும் மயங்கிய நிலையில் கிடைந்ததனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரம்யாவின் பாட்டி அவர்களை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு மூன்று பேரையும் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இருவரும் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

crime

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் மனைவி அம்சா உயிரிழந்த துக்கம் தாளாமல் பிள்ளைகளைக் கொன்றுவிட்டு அருள் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.

முதலில் பிள்ளைகளுக்கு மயக்கமருந்து கொடுத்து, பின்பு அவர்களின் கழுத்தை நெறித்துக் கொலை செய்துவிட்டு பின்னர் அருள் மனைவியின் புடவையில் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.