மகளை திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்திய கொடூர தந்தை - சுழுக்கெடுத்த போலிசார்
துருக்கியில் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்த 13 வயது மகளை கொடூரமாக தாக்கி தந்தை ஒருவர் உயிருடன் கொளுத்திய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கியில் கடந்த வியாழக்கிழமை இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. அஹ்மத் முகமது த்வாலா என்பவர் தனது மகள் அமரா த்வாலா (13) என்பவரை தங்களது குளியலறையில் உயிருடன் கொளுத்திவிட்டு மாயமானார்.
சம்பவத்தின் போது பாட்டு சத்தம் அதிகமாக ஒலிக்கவிட்டு, அந்த சிறுமியின் அலறல் சத்தம் கேட்காமல் இருக்க செய்துள்ளார். பின்னர் தமது இன்னொரு 12 வயது மகளுடன் சம்பவயிடத்தில் இருந்து தப்பியுள்ளார்.
அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவப்பகுதிக்கு விரைந்து வந்த மருத்துவ உதவிக்குழுவினர் தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் சிறுமி த்வாலாவை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
ஆம்புலன்சில் செல்லும் வழியில் தமக்கு நேர்ந்த கொடுஞ்செயலுக்கு தந்தையே காரணம் என கூறியுள்ளார். மேலும், மருத்துவமனையில் கொண்டு செல்லும் வழியிலேயே சிறுமி மரணமடைந்துள்ளார்.
இதனையடுத்து அவசர உதவிக்குழுவினர் உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தொடர்ந்து துரிதமாக செயல்பட்ட பொலிசார், முகமது த்வாலாவை கைது செய்துள்ளனர். ஆனால் தம்மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அவர் மறுத்துள்ளார்.
இதனிடையே, இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திய வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி இவர் என்பதை உறுதி செய்து கொண்ட பொலிசார், முன்னாள் மனைவி மீது கொதிக்கும் நீரை ஊற்றி கொல்ல முயன்ற சம்பவத்தில் தொடர்புடையவர் எனவும் தெரிவித்துள்ளனர்.
பிரிந்து சென்ற மனைவியை பழி வாங்கவே தமது 13 வயது மகளை திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது.
இதனிடையே, மரணமடைந்த சிறுமியின் உடலை கைப்பற்ற தாயார் உள்ளிட்ட உறவினர்கள் எவரும் முன்வராத நிலையில், ஆதரவற்றவர்களுக்கான கல்லறையில் மாநில நிர்வாகம் இறுதிச்சடங்குகளை முன்னெடுத்துள்ளது என தெரிய வந்துள்ளது.