அரசியல்ல அப்பாவவது பொண்ணாவது: உள்ளாட்சித் தேர்தலில் தந்தையை எதிர்த்து போட்டியிடும் மகள்

daughter father tamilnadu localelection PanchayatPresident
By Irumporai Sep 21, 2021 02:13 PM GMT
Report

ஊராட்சி தலைவர் பதவிக்கு ஒரே குடும்பத்தை தந்தையும், மகளும் மோதும் சுவாரஸ்ய சம்பவம் வேலூரில் அரங்கேறியுள்ளது காட்பாடி வட்டம் ஏரந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த 23 வயதான பட்டதாரி இளம் பெண் செந்தமிழ்செல்வி. இவர் தற்போது நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் ஏரந்தாங்கல் ஊராட்சி தலைவர் பதவிக்கு சுயேட்ச்சையாக போட்டியிட தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

செந்தமிழ்செல்வியின் தந்தை சாது முத்துகிருஷ்ணனும் அதே ஊரில் தலைவர் பதவிக்கு வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். சமூக சேவை செய்ய எனக்கு ஆர்வம் அதிகம், நான் வெற்றி பெற்றால் எங்களது ஊர் முன்னேற்றத்திற்கு தேவையான அனைத்து பணிகளையும் செய்வேன் செந்தமிழ்செல்வி தெரிவித்துள்ளார்.

அரசியல்ல அப்பாவவது பொண்ணாவது: உள்ளாட்சித் தேர்தலில் தந்தையை எதிர்த்து போட்டியிடும் மகள் | Daughter Contesting Against Father Local Elections

முத்துகிருஷ்ணன் கூலி வேலை செய்பவர். இவர் முன்னதாக இரண்டு நாடாளுமன்ற தேர்தல்களில் அரக்கோணம் தொகுதியில் போட்டியிட்டு டெபாசிட்டை இழந்தவர். கடந்த உள்ளாட்சித் தேர்தல்களின்போதும், ஏரந்தாங்கல் ஊராட்சியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடதக்கது.