சென்னையில் பரபரப்பு - மகளின் வாயில் தந்தையே பூச்சி மருந்து ஊற்றிய அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன?
சென்னை, தாம்பரம், நாவலூர் பகுதியை சேர்ந்தவர் அர்ஜூனன். இவருடைய மனைவி ஆண்டாள். இத்தம்பதிக்கு அர்ச்சனா என்ற மகள் உள்ளார். அர்ச்சனா சோமமங்கலத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 10 வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக அர்ச்சனா சரியாக பள்ளிக்கு செல்லவில்லை. அதே பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவருடன் ஊர் சுற்றி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இத்தகவல் அர்ச்சனாவின் தந்தை அர்ஜூனனுக்கு தெரியவந்தது.
இதனையடுத்து, அர்ச்சனாவை சரமாரியாக தாக்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல், அர்ச்சனாவின் வாயை திறந்து பூச்சி கொல்லி மருந்து ஊற்றியுள்ளார். அர்ச்சனாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர். உடனே, அர்ச்சனாவை தந்தையிடமிருந்து மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவனையில் அனுமதித்தனர்.
மருத்துவமனையில் அர்ச்சனா உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு வந்த போலீசார் அர்ஜூனனிடம் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மகளின் வாயில் தந்தையே பூச்சி மருந்து ஊற்றியதாக சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.