குட் நியூஸ் சொன்ன ஐஸ்வர்யா ரஜினிகாந்த் - தேதியும் குறிச்சாச்சு

Rajinikanth dhanush aniruth Aishwaryarajinikanth musafiralbum
By Petchi Avudaiappan Mar 04, 2022 12:50 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நல்லதொரு செய்தியை ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். 

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷூம் காதலித்து கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என மகன்கள் உள்ள நிலையில் இருவரும் பிரிவதாக கடந்த ஜனவரி மாதம் தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இருவரும் மீண்டும் இணைய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இரண்டு குடும்ப உறுப்பினர்களும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் இவர்கள் இருவரும் அவர்களது திரையுலக பணிகளில் பிசியாக இருக்கின்றனர். ஐஸ்வர்யா முசாபிர் என்ற காதல் பாடலுக்கான ஆல்பம் ஒன்றை இயக்க ஐதராபாத்தில் தங்கி அதன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

இந்த பாடலின் புரோமோ வீடியோ காதலர் தினத்தன்று வெளியான நிலையில் முசாபிர் பாடலை தமிழில் அனிருத் தான் பாடியுள்ளார். விரைவில் முசாபிர் வருவார் என்று கூறி போஸ்டர் ஒன்றை சமீபத்தில் ஐஸ்வர்யா வெளியிட்டார். அதனைப் பார்த்த ரசிகர்கள் அதில் இருந்த இரு சக்கர வாகனத்தை இது தனுஷின் வேலையில்லா பட்டதாரி ஸ்கூட்டரா என கேட்டனர். 

இந்நிலையில் முசாபிர் வீடியோ வெளியாகும் தேதியை அறிவித்து ஐஸ்வர்யா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் . முசாபிர் வீடியோ மார்ச் 8ம் தேதி வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்புகளில் ஒன்றில் கூட  ஐஸ்வர்யாவின் பெயருக்கு பின்னால் தனுஷ் பெயர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.