அடுத்த வாரம் மேலும் 3 ரபேல் விமானங்கள் இணைகின்றன

india rafale fighter aircraft
By Jon Mar 26, 2021 02:36 PM GMT
Report

அடுத்த வாரம் மேலும் 3 ரபேல் விமானங்கள் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. மத்திய அரசு 2016ல் பிரான்சின், 'டசால்ட் ஏவியேஷன்' நிறுவனத்திடம், 59 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிற்கு, 36 ரபேல் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்தது. இதன்படி, 2020 ஜூலை - 2021 ஜன., வரை, 11 ரபேல் விமானங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

அவை, பஞ்சாப் மாநிலம் அம்பாலாவில் உள்ள இந்திய விமானப்படை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அடுத்த வாரம் மூன்று விமானங் களும், ஏப்ரல் மத்தியில் மேலும் ஒன்பது ரபேல் விமானங்களும் இந்தியாவுக்கு வழங்கப்பட உள்ளன.