160 பயணிகளுடன் இருளில் மூழ்கிய விமானம்
By Fathima
இயந்திரக்கோளாறு காரணமாக இண்டிகோ விமானம் ஒன்று இருளில் மூழ்கியதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
குஜராத்தின் வதோதரா விமான நிலையத்திலிருந்து டில்லிக்கு இண்டிகோ விமானம் 160 பயணிகளுடன் புறப்பட்டது.
நேற்று இரவு 8.40 மணியளவில் இயந்திரக்கோளாறால் மொத்தமாக இருளில் மூழ்கியது.
விமானத்தின் ஜிபியு கருவியில் ஏற்பட்ட கோளாறே இதற்கு காரணம் என்றும் இதனை சரிசெய்ய 30 நிமிடங்கள் வரை ஆனது.
இதுகுறித்து இண்டிகோ நிறுவனம், இயந்திரக்கோளாறு காரணமாக 6E657 விமானம் தாமதமாக கிளம்பியது, பிரச்சனை தீர்க்கப்பட்ட நிலையில் டில்லி புறப்பட்டதாக தெரிவித்துள்ளது.
