நிறத்தை வைத்து கேலி செய்த கணவன் .. கோபத்தில் ஆணுறுப்பை வெட்டிய மனைவி !

By Irumporai Sep 28, 2022 10:43 AM GMT
Report

தன் கருப்பு நிறத்தை கேலி செய்த கணவனை கோடாரியால் வெட்டி கொன்ற சம்பவம் சட்டீஸ்கர் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 நிறத்தை வைத்து கேலி

சட்டீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தில் உள்ள அம்ளிஸ்வர் கிராமத்தை சேர்ந்த ஆனந்த் சோன்வான் இவரது மனைவி சங்கீதா சோன்வானி மனைவி சங்கீதாவின் கருப்பு நிறத்தை வைத்து அவரது கணவர் கேலி செய்து வருவதும்,இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு சண்டை வரும் என கூறப்படுகிறது.

நிறத்தை வைத்து கேலி செய்த கணவன் .. கோபத்தில் ஆணுறுப்பை வெட்டிய மனைவி ! | Dark Skin Tauntsshe Killed Husband With Axe

கோடரியால் வெட்டிய மனைவி

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஆனந்த் சோன்வானி அவரது மனைவி சங்கீதாவின் கருப்பு நிறத்தை விடாமல் கேலி செய்து வந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சங்கீதா வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து கணவன் ஆனந்தை வெட்டி கொலை செய்துள்ளார்.

மேலும் கூர்மையான ஆயுதத்தை கொண்டு கணவனின் ஆணுறுப்பை அவரது மனைவி வெட்டி எடுத்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பட்டன் காவல்துறையினர் சங்கீதா மீது கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.