பிரதமரிடம் இந்த மூன்று கேள்விகளை கேட்க முதல்வருக்கு தைரியம் உண்டா? - ஸ்டாலின் எழுப்பிய கேள்வி

modi bjp stalin edappadi
By Jon Apr 02, 2021 11:50 AM GMT
Report

பிரதமரிடம் இந்த மூன்று கேள்விகளை கேட்க முதல்வருக்கு தைரியம் இருக்கிறதா என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு கட்சிகளும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பிரதமரிடம் இந்த மூன்று கேள்விகளை முதல்வர் அவர்களால் கேட்க முடியுமா என ட்விட்டர் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவில், நாளை பிரச்சார மேடையிலேயே பிரதமரிடம் சிஏஏ மற்றும் 3 வேளாண் சட்டங்கள் ரத்து; நீட் விலக்கு; எழுவர் விடுதலை; நிவாரண நிலுவைத் தொகை குறித்து கேட்பீரா பழனிசாமி? நிமிர்ந்து கூட வேண்டாம்,குனிந்து கொண்டேவாவது கேட்கும் தைரியம் உண்டா? நீலிக்கண்ணீரும் நாடகமும் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றவா? என பதிவிட்டுள்ளார்.