இளம்பெண் பாலியல் வன்கொடுமை - பிரபல இலங்கை வீரர் தனுஷ்கா குணதிலகா ஜாமீன் மறுப்பு..!
இளம்பெண் பாலியல் வன்கொடுமை புகாரில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல இலங்கை வீரர் தனுஷ்கா குணதிலகாவிற்கு, ஆஸ்திரேலியா கோர்ட் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது.
t20ல் வெளியேறிய இலங்கை அணி
நடைபெற்று வரும் T20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா வென்றதால், இலங்கை அணிக்கு இருந்த கடைசி வாய்ப்பு தகர்ந்தது. இதனையடுத்து, அதிகாரப்பூர்வமாக தொடரிலிருந்து இலங்கை அணி வெளியேறியுள்ளது.
வீரர் தனுஷ்கா குணதிலகா
இலங்கை அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக வலம் வந்த தனுஷ்கா குணதிலகா, டேட்டிங் ஆப் மூலம் 29 வயது பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இதனையடுத்து, கடந்த 2-ம் தேதி ரோஸ் பே நகரில் உள்ள ஒரு ஓட்டலில் இருவரும் தனியாக சந்தித்துக் கொண்டனர்.
தனுஷ்கா குணதிலகா கைது
அப்போது அப்பெண்ணை குணதிலகா பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இது குறித்து அப்பெண் சிட்னி போலீசில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் குணதிலகாவை நேற்று கைது செய்தனர்.
இதனைடுத்து, இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகாவை போலீசார் விசாரித்து 6 சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதித்துள்ளனர். தற்போது அவர் சுரி ஹில்ஸ் என்ற சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஜாமீன் மறுப்பு
இந்நிலையில், கைது செய்யப்பட்ட இலங்கை வீரர் குணதிலகா சிறையில் இருந்தவாறு இன்று டவுணிங் சென்டர் நீதிமன்றத்தில் காணொளி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, இந்த வழக்கில் தனக்கு ஜாமின் வழங்கக்கோரி மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் குணதிலகாவுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தார்.
இதனையடுத்து, வீரர் தனுஷ்கா குணதிலகா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் உலகில் பிரபலமாக திகழ்ந்த தனுஷ்கா குணதிலகா கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் அவரது ரசிகர்களை பேரதிர்ச்சி அடைய வைத்துள்ளது.