இளம்பெண் பாலியல் வன்கொடுமை புகார்; பிரபல இலங்கை வீரர் தனுஷ்கா குணதிலகா கைது - ரசிகர்கள் ஷாக்...!

Sri Lanka Cricket Sexual harassment
By Nandhini Nov 07, 2022 05:21 AM GMT
Report

இளம்பெண் பாலியல் வன்கொடுமை புகாரில் பிரபல இலங்கை வீரர் தனுஷ்கா குணதிலகாவை போலீசார் கைது செய்துள்ளனர். 

T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -

ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த 16-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொண்டுள்ளன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடி வருகிறது.

இலங்கை வெளியேறியது

இலங்கை நடைபெற்று வரும் T20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா வென்றதால், இலங்கைக்கு இருந்த கடைசி வாய்ப்பு தகர்ந்தது. இதனையடுத்து, அதிகாரப்பூர்வமாக தொடரிலிருந்து இலங்கை அணி வெளியேறியுள்ளது.

Danushka Gunathilaka

வீரர் தனுஷ்கா குணதிலகா

இலங்கை அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக வலம் வருபவர் தனுஷ்கா குணதிலகா. இவர் இதுவரை 47 ஒருநாள் போட்டிகள், 46 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆல் ரவுண்டரான தனுஷ்கா குணதிலகா இலங்கை அணியின் பல்வேறு வெற்றிக்கு சிறந்த பங்களிப்பை வழங்கி இருக்கிறார்.

நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியில் பங்கேற்று குணதிலகா விளையாடினார்.போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார். இவருக்கு பதிலாக இலங்கை அணியில் பண்டாரா சேர்க்கப்பட்டார். காயம் அடைந்தாலும் அவர் இலங்கைக்கு திரும்பாமல் அணியுடனேயே இருந்து, அணிக்கு உற்சாகமளித்துக் கொண்டிருந்தார்.

தனுஷ்கா கைது

இப்போட்டிக்கு பின்னர், தனுஷ்கா குணதிலகா சிட்னி போலீசார் கைது செய்துள்ளனர்.

வீரர் தனுஷ்கா, டேட்டிங் ஆப் மூலம் 29 வயது பெண்ணுடன் பழகி வந்துள்ளார். கடந்த 2-ம் தேதி ரோஸ் பே நகரில் உள்ள ஒரு ஓட்டலில் இருவரும் தனியாக சந்தித்துக் கொண்டனர்.

அப்போது அப்பெண்ணை குணதிலகா பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறர். இது குறித்து அப்பெண் சிட்னி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் குணதிலகாவை கைது செய்துள்ளனர். இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகாவை போலீசார் விசாரித்து 6 சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதித்துள்ளனர். இதனால், ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

அந்த அறிக்கையில் -

'சிட்னியில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் வீரர் தனுஷ்கா குணதிலகா கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இந்த விஷயத்தை ஐசிசியுடன் கலந்தாலோசித்து, ஒரு முழுமையான விசாரணையை விரைவாகத் தொடங்கும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் வீரர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஒரு வேளை குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்து விடுமா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.