இந்திய அணியின் படுதோல்விக்கு இவர் தான் முழு காரணம் - கடுப்பான முன்னாள் வீரர்

Shikhar Dhawan INDvsSL Danish kaneria
By Petchi Avudaiappan Jul 31, 2021 11:54 PM GMT
Report

இலங்கை அணிக்கு எதிரான இந்திய அணியின் தோல்விக்கு ஷிகர் தவான் தான் காரணம் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார்.

ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கை அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில் இந்தியா ஒரு நாள் தொடரை கைப்பற்றிய நிலையில், டி20 தொடரை இழந்தது.

இந்திய அணியின் படுதோல்விக்கு இவர் தான் முழு காரணம் - கடுப்பான முன்னாள் வீரர் | Danish Kaneria Blames Shikhar Dhawan Captaincy

இதனிடையே முன்னாள் பாகிஸ்தான் வீரரான டேனிஷ் கனேரியா ஷிகர் தவானின் மோசமான கேப்டன்சி தான் இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா தனது பவுலிங் பலத்தை பயன்படுத்தி முதலில் பந்துவீசி இலங்கையை குறைந்த ரன்னுக்கு சுருட்டுவதை விடுத்து முதலில் பேட்டிங் ஆடியது பெரிய தவறு எனவும் அவர் விமர்சித்துள்ளார்.