மும்பை அணி வீரர் செய்த மோசமான சாதனை - கடுப்பான ரசிகர்கள்

mumbaiindians MIvKKR KKRvMI danielsams
By Petchi Avudaiappan Apr 07, 2022 04:58 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

கொல்கத்தா அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை அணி வீரர் டேனியல் சாம்ஸ்  மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார். 

புனேவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 14வது லீக் ஆட்டத்தில் மும்பை - கொல்கத்தா அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய மும்பை அணி  20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் குவித்தது. 

தொடர்ந்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியில் பேட் கம்மின்ஸ் 15 பந்துகளில் 56 ரன்கள் குவித்து அணியை வெற்றிப்பாதைக்கு எளிதாக அழைத்து சென்றார். அவர் 16 ஓவரை வீசிய ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் டேனியல் சாம்ஸ் பவுலிங்கில் சக நாட்டு வீரரான பேட் கம்மின்ஸ் 35 ரன்கள் விளாசினார். 

இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக அரை சதம் விளாசிய பேட்ஸ்மேன் என்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் சாதனையை சமன் செய்து பேட் கம்மின்ஸ் புதிய சாதனை படைத்தார். வேகப்பந்து வீச்சாளரான கம்மின்ஸ் டேனியல் சாம்ஸ் பவுலிங்கை இப்படி அடித்து நொறுக்கினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். எவ்வளவு மோசமாக இருக்கும் என்று என கூறும் ரசிகர்கள் இந்தியாவின் முன்னாள் வீரர் அசோக் டின்டாவின் லேட்டஸ்ட் வாரிசு டேனியல் சாம்ஸ் என கிண்டல் அடித்து வருகின்றனர். 

மேலும் இந்த போட்டியில் 35 ரன்களை அள்ளிக்கொடுத்த சாம்ஸ் 15 வருட ஐபிஎல் வரலாற்றில் ஒரு ஓவரில் 30 ரன்களை கொடுத்த முதல் மும்பை பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதேபோல் ஒட்டுமொத்த ஐபிஎல் வரலாற்றில் ஒரு ஓவரில் அதிக ரன்களை வாரி வழங்கிய 2வது பந்துவீச்சாளர் என்ற சாதனைக்கும் டேனியல் சாம்ஸ் சொந்தக்காரர் ஆகியுள்ளார். ஐபிஎல் வரலாற்றில் 5 கோப்பைகளை வென்ற மும்பை அணியில் முதல் முறையாக ஒரு அசோக் டிண்டா உருவாகியுள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.