கண்ணீருடன் விடைபெற்ற பிரபல நடிகர் - ரசிகர்கள் அதிர்ச்சி
ஜேம்ஸ் பாண்ட் நடிகர் டேனியல் கிரேக் படக்குழுவினருடன் உருக்கமாகப் பேசி விடைபெறும் பெறும் வீடியோ வெளியாகி உள்ளது .
ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் எராளமான ரசிகர்கள் உள்ளனர் . இதுவரை 24 ஜேம்ஸ் பாண்ட் படங்கள் வெளியாகி வசூலைக் குவித்துள்ளது .
இந்நிலையில் , 25 ஆவது பாண்ட் படமான ' நோ டைம் டு டை ' படத்தை கேரி ஜோஜி புகுனகா இயக்கியுள்ளார் . டேனியல் கிரேக் , பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் .
மேலும் , ராமி மலேக் , லீசெய் டவுக்ஸ் , லசானா லிஞ்ச் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர் . கொரோனா காரணமாகத் தள்ளிப் போன இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் முடிந்தன .
இந்நிலையில் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் தான் கடைசியாக நடக்கும் நோ டைம் டை படத்தின் கடைசிக்கட்ட படப்பிடிப்பில் , நாயகன் டேனியல் கிரெய்க் படக்குழுவினருடன் உருக்கமாகப் பேசி விடைபெறும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .
இதற்கு முன் கேசினோ ராயல் , குவாண்டம் ஆப் சோலஸ் , ஸ்கைஃபால் உட்பட நான்கு பாண்ட் படங்களில் நடித்துள்ள கிரேக் நடிக்கும் ஐந்தாவது மற்றும் கடைசி பாண்ட் படம் இதுவாகும் . இப்படம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக உள்ளது.
Daniel Craig’s farewell speech after wrapping No Time To Die, his last ???? James Bond film. ? @007 pic.twitter.com/xCqab3JK3z
— Filmthusiast (@itsfilmthusiast) September 17, 2021