அந்தரங்க பகுதிகளில் உள்ள முடி ஆபத்தா? பாதுகாப்பா? நிபுணரின் பதில் இதோ

By Manchu Jan 31, 2026 11:34 PM GMT
Report

அந்தரங்க பகுதியில் வளரும் முடியினை அகற்றுவது ஆபத்தை ஏற்படுத்துமா? என்பதை குறித்து மருத்துவர் கூறும் கருத்துக்களை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

இன்றைய காலத்தில் தனிப்பட்ட பராமரிப்பு என்று அழகுக்காகவா? அல்லது ஆரோக்கியத்திற்காகவா? என்பது பலருக்கும் தெரிவதில்லை. அவ்வாறு அந்தரங்க பகுதியில் வளரும் முடியினை அகற்றுவது, சுகாதாரமானதா? சுகாதாரமற்றதா? என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது.

இதிலுள்ள மருத்துவ உண்மைகளை அவ்வளவாக யாரும் அறிந்திருக்கவில்லை. இந்த பதிவில் மருத்துவர்களின் கருத்து என்னவாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

அந்தரங்க பகுதிகளில் உள்ள முடி ஆபத்தா? பாதுகாப்பா? நிபுணரின் பதில் இதோ | Dangers Of Hair Removal Doctors Advice

அந்தரங்க முடி பாதுகாப்பா?

அந்தரங்கத்தில் உள்ள முடி தேவையில்லாமல் நமது உடலில் வளரும் முடி கிடையாது. மருத்துவர்களின் கருத்து என்னவெனில், அது பாதுகாப்பு அமைப்பின் முக்கியமான பகுதியாகும்.

தூசி, அழுக்கு, பாக்டீரியாக்கள் இவை பிறப்புறுப்பு பகுதியில் எளிதில் நுழைவதைத் தடுப்பதற்கு பெரிதும் உதவுகின்றது. அதுமட்டுமின்றி இறுக்கமான ஆடைகளால் ஏற்படும் உராய்வினை தடுத்து சருமத்தை பாதுகாக்கவும் செய்கின்றது.

அந்தரங்க பகுதிகளில் உள்ள முடி ஆபத்தா? பாதுகாப்பா? நிபுணரின் பதில் இதோ | Dangers Of Hair Removal Doctors Advice

வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தினைக் கட்டுப்படுத்துவதிலும் முக்கியமாக முடி காணப்படுகின்றது. ஆதலால் முடி சுகாதாரமில்லை என்ற எண்ணத்தை விட்டுவிட்டு, குறித்த பகுதியினை சுத்தமாகவும், அதிகம் ஈரம் இல்லாமலும் வைப்பது தான் சுகாதாரம் ஆகும்.

முடி சற்று நீளமாக இருந்தாலும் வியர்வை, அரிப்பு மற்றும் துர்நாற்றம் ஏற்படும் என்பதால் அதனை சுத்தமாக ஷேவ் செய்யாமல், ட்ரிம் செய்து கொள்ளலாம்.

அந்தரங்க பகுதியில் தோல்கள் மிகவும் உணர்திறன் கொண்டிருப்பதால், ரேஸர்கள், மெழுகு பூச்சு, முடியை அகற்றும் கிரீம்கள் இவற்றினை பயன்படுத்துவதை தவிர்க்கவும். சிறிய காயத்தினால் கூட பாக்டீரியாக்கள் எளிதில் உள்ளே நுழையும் அபாயம் இருக்கின்றது.

அந்தரங்க பகுதிகளில் உள்ள முடி ஆபத்தா? பாதுகாப்பா? நிபுணரின் பதில் இதோ | Dangers Of Hair Removal Doctors Advice

மேலும் பெண்களுக்கு யோனி எரிச்சல் ஏற்படும் அபாயமும் இருக்கின்றது. ஆதலால் பிளேடு நேரடியாக தோலை தொடாதவாறு பாதுகாப்புடன் மின்சார ட்ரிம்மரை பயன்படுத்தலாம் என்று மருத்துவர் அறிவுறுத்துகின்றனர்.

அதே போன்று மற்றவர்கள் பயன்படுத்திய ட்ரிம்மர்களையும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அந்தரங்க பகுதியினை ட்ரிம் செய்வதற்கு முன்பும் பின்பும் வெதுவெதுப்பான தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யவும்.

ட்ரிம் செய்து முடித்த பின்பு எரிச்சல் ஏற்பட்டால்வாசனை இல்லாத லேசான மாய்ஸ்சரைசரை பயன்படுத்தலாம். தோல் பிரச்சனை, அடிக்கடி தொற்றும், அழற்சி காணப்பட்டால் மருத்துவரின் ஆலோசனைக்கு பின்பே கிரீம்களை எடுக்கவும்.

அந்தரங்க பகுதிகளில் உள்ள முடி ஆபத்தா? பாதுகாப்பா? நிபுணரின் பதில் இதோ | Dangers Of Hair Removal Doctors Advice