உலகின் மர்மமான அமானுஷ்யங்கள் நிறைந்த காடுகள் - தப்பித்தவறி கூட இங்க போய்விடாதீர்கள்..!
உலகின் மிகவும் ஆபத்தான மர்மங்கள் நிறைந்த சில காடுகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
மர்ம காடுகள்
காடுகள் என்றாலே இயற்கையான சூழல், பசுமையான மரங்கள், ரம்மியமான காட்சிகள் தான் நினைவிற்கு வரும். ஆனால், அனைத்து காடுகளும் வெறும் அழகாக மட்டும் இருப்பதில்லை, சில காடுகளில் மர்மங்களையும், அமானுஷ்யங்களையும் கொண்டுள்ளது.
ஒரு நாட்டின் வளத்தை அங்கு உள்ள காடுகளை வைத்துத் தான் தீர்மானிக்கப்படுகிறது எனினும்,உலகில் உள்ள சில காடுகள் இயற்கைக்கு அப்பால் தங்களுக்குள் மர்மமான சில விஷயங்களைக் கொண்டிருக்கிறது.
இந்த காடுகளுக்குச் செல்வது என்பது தனிநபர் தைரியத்தைப் பொறுத்தது. இதயத்தில் பயம் இருப்பவர்கள் பொதுவாக இந்த காடுகளுக்குச் செல்வதைத் தவிர்ப்பார்கள்.
அகிகஹாரா காடு, ஜப்பான்
ஜப்பானில் அமைந்துள்ள இந்த அகிகஹாரா காடு உலகின் மிகவும் அமானுஷ்யம் நிறைந்த காடுகளில் ஒன்றாகும். இந்த காட்டில் நடந்த எண்ணற்ற தற்கொலைகள் தான் இதற்குக் காரணம் என மக்கள் கூறுகின்றனர். இங்கு அடர்ந்த மரங்கள் மற்றும் வினோதமான அமைதியை மட்டும் இல்லை, இந்த காட்டுக்குள் பார்வையாளர்களைத் தீவிரமாக பயமுறுத்தும் பல அமானுஷ்யங்களைக் கொண்டுள்ளது.
ஹோயா பேசியு காடு, ருமேனியா
டிரான்சில்வேனியாவின் பெர்முடா முக்கோணம் என்று அழைக்கப்படும் ஹோயா பேசியு என்ற இந்த காட்டுக்குள், ஏலியன்கள் ஸ்பேஸ் ஷிப், காணாமல் போனவர்கள் மற்றும் அமானுஷ்ய பேய் தோற்றங்கள் போன்ற பல்வேறு மர்மமான நடவடிக்கைகளுக்கு மிகவும் பிரபலமானது.
பாலிபோலி காடு, அயர்லாந்து
பாலிபோலி காட்டில், வெள்ளை நிறத்தில் ஒரு ஸ்பெக்ட்ரல் பெண்ணால் வேட்டையாடப்படுவதாக பரவிய வதந்தியால் பல பார்வையாளர்களுக்குள் பய உணர்வை ஏற்படுத்தியது. விசித்திரமான வெளிச்சங்கள் மற்றும் உருவங்களைப் பார்த்ததாக பல பொதுமக்கள் கூறியதால் இந்த காடு உலகின் அமானுஷ்ய காடுகளில் ஒன்றாக மாறிவிட்டது.
டெரிங் வூட், இங்கிலாந்து
ஸ்க்ரீமிங் வூட்ஸ் என்றும் அழைக்கப்படும் டெரிங் வூட் காட்டின் எல்லையில் பலபேர் சோகமான முடிவுகளை சந்தித்து அமைதியற்ற ஆத்மாக்களால் சூழ்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், இரவில் அழுகை குரல், உடல் அற்ற அலறல் கேட்டுக்கொண்டே இருப்பதாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
போர்லி ரெக்டரி வூட்ஸ், இங்கிலாந்து
இங்கிலாந்தின் ஆபத்தான பேய் வீடு என்று அழைக்கப்படும் போர்லி ரெக்டரிக்கு அருகாமையில் உள்ளது இந்த போர்லி ரெக்டரி வூட்ஸ் . இங்கு உலாவும் அமைதியற்ற ஆவிகளின் பின்னணியில்,கதைகளுடன் இனைந்த ஒரு இருண்ட கடந்த கால வரலாற்றைக் கொண்டுள்ளது. இப்பகுதியில் நடந்த சோக நிகழ்வுகளுடன் தொடர்புடையதாக நம்பப்படும் ஆவிகள், மரங்களுக்கிடையில் தங்கி, காடுகளின் அமானுஷ்யத்தை அதிகரிப்பதாக கூறப்படுகிறது.