நேற்று வரைக்கும் டைட்டானிக் ரோஸை காதலித்தேன் ஆனால் இன்று முதல் விக்னேஷ் சிவனின் ட்விட் வைரல்

vigneshsivan dancingrose SarapattaParambarai
By Irumporai Jul 25, 2021 09:54 AM GMT
Report

விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் சார்பட்டா பரம்பரை படம் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான சார்பட்டா பரம்பரை .

இது  ஜூலை 22-ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸானது . வடசென்னையில் 1970-களில் நடந்த குத்துச்சண்டையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்த படத்தின் கதை ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக இந்த படத்தில் டான்ஸிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஷபீருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இந்நிலையில் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பதிவில் டான்ஸிங் ரோஸ் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

[

அதில் 'நேற்று வரை டைட்டானிக் ரோஸை காதலித்தேன். இன்று முதல் டான்ஸிங் ரோஸை காதலிக்கிறேன். சார்பட்டா பரம்பரை என்ன ஒரு அருமையான படம்' என பதிவிட்டுள்ளார்.

தற்போது அவரின் இந்த பதிவு ட்விட்டரில் வைரலாகி வருகிறது.