மீனாவிடம் 'உனக்கு ஒரு கணவன் வேணும்னு சொன்னேன்; அதுக்கு மீனா சொன்னது.. கலா மாஸ்டர் பேட்டி!
நடன இயக்குனர் கலா மாஸ்டர் தனது நண்பரான நடிகை மீனா பற்றி பேசியுள்ளார்.
நடிகை மீனா
90ஸ்'களில் பலரின் கனவுக் கன்னியாக வளம் வந்தவர் நடிகை மீனா. 1982ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக சிவாஜி நடித்த நெஞ்சங்கள் என்ற திரைப்படத்தின் முதன் முறையாக நடித்தார். 1990ல் ஒரு புதிய கீதை என்ற தமிழ் படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார்.
ரஜினி,கமல்,அஜித்,என அனைத்து முன்னணி ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்திருக்கிறார்.தமிழ், தெலுங்கு,கன்னடம், மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடித்திருக்கிறார். தற்போது தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இவர் தமிழில் கடைசியாக 2021ல் ரஜினியின் அண்ணாத்த என்ற படத்தில் நடித்திருந்தார். கடந்த 2009ம் ஆண்டு மீனா வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்தார். ஆனால் அவரின் கணவர் கடந்த 2022ம் ஆண்டு நுரையீரல் நோய் காரணமாக இறந்தார்.
மீனாவின் நெருங்கி நண்பராக திரைப்பட நடன இயக்குநர் கலா மாஸ்டர் இருக்கிறார். அண்மையில் கலா மாஸ்டர் யூடியூப் சானெல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் மீனாவை பற்றி பேசியுள்ளார் கலா மாஸ்டர்.
பேட்டி
அவர் பேசியதாவது "எனக்கு மீனாவுடன் 25 வருட பிரண்ட்ஷிப். அதும் சாதாரண பிரெண்ட்ஷிப் கிடையாது, குடும்ப பிரண்ட்ஷிப். நாங்கள் நண்பரகளாகவும் இருப்போம், பிரெண்ட்ஸாகவும் இருப்போம்.
அவளின் கணவருக்கு உடல்நிலையை சரியில்லாமல் இருந்த அந்த 3 மாதம் நான் மீனாவுடன் தான் இருந்தேன். அவளைப் பற்றிச் சொல்லவேண்டும் என்றால், சினிமாக்கும் அவள் ஹீரோயினாக இருப்பதற்கும் சம்மந்தமே கிடையாது. மீனா ஒரு மென்மையான மனம் கொண்டவள்.
மீனாவின் கணவன் இறந்த பிறகு, அவளிடம் நான் 'உனக்கு வாழ்க்கையில் ஒரு துணை வேண்டும், உனக்கு சின்ன வயசுதான்' என்று சொன்னால், மீனா என்னை திட்டுவாள். உங்கள் வேலையை பார்த்துட்டு போங்க, வேண்டாம் அக்கா எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறாள் என்று மீனா சொன்னாள். நான் வாயை மூடிக்கொண்டு போயி விடுவேன்' என்று கலா மாஸ்டர் பேசியுள்ளார்.
You May Like This Video