ஆபத்தான நிலையில் நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர் - அதிர்ச்சியில் திரையுலகம்

covid19 actorsanthanam dancemastersivasankar
By Petchi Avudaiappan Nov 24, 2021 11:35 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

பிரபல நடன இயக்குநரான சிவசங்கர் மாஸ்டர் உயிருக்கு ஆபத்தான முறையில் சிகிச்சைப் பெற்று வருவதாக வெளியான தகவல்கள் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

 தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் 800க்கும் மேற்பட்ட படங்களில் பணிபுரிந்துள்ள சிவசங்கர் மாஸ்டர் பூவே உனக்காக , விஷ்வதுளசி, வரலாறு , உளியின் ஓசை போன்ற படங்களுக்கு சிறந்த நடனாசிரியருக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளார்.

ஆபத்தான நிலையில் நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர் - அதிர்ச்சியில் திரையுலகம் | Dance Master Sivasankar Health Cricical Condition

குறிப்பாக தனுஷ் நடித்த திருடா திருடி படத்தில் இடம்பெற்ற  மன்மத ராசா பாடலில் பணியாற்றியதன் மூலம் சிவசங்கரின் புகழ் மேலும் அதிகமானது. நடனம் மட்டுமின்றி அஜித் நடித்த வரலாறு, சந்தானத்தின் கண்ணா லட்டு தின்ன ஆசையா, தில்லுக்கு துட்டு, பாலாவின் பரதேசி, சூர்யா நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ ஆகிய படங்களில் நடிகராகவும் தனது சிறப்பான பங்களிப்பை அளித்திருந்தார். 

இந்நிலையில் சிவசங்கர் மாஸ்டருக்கு கொரோனா ஏற்பட்டதாகவும், அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும்  அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதற்கு அதிகம் செலவாகும் என்ற நிலையில் அவருடைய குடும்பத்தினரிடத்தில் சிகிச்சைக்கான செலவுகளை சமாளிக்க முடியாத அளவில் பணத்தட்டுப்பாடு இருப்பதாகவும் சினிமா பிஆர்ஓ நிகில் முருகன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.