நிழல் உலக தாதாவின் புகைப்படத்தை தபால் தலையாக வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய தபால்துறை
நிழல் உலக தாதாக்களான சோட்டா ராஜன் மற்றும் பஜ்ரங்கி ஆகியோரின் புகைப்படங்களை தபால் தலையாக வெளியான நிலையில், தற்போது தபால் துறை விளக்கம் அளித்துள்ளது. தபால் துறையில் சில ஆண்டுகளுக்கு முன் மை ஸ்டாம்ப் என்ற திட்டம் தொடங்கப்பட்டது.
திட்டத்தின் கீழ் எந்த ஒரு தனிநபரும் தங்களது புகைப்படத்துடன் கூடிய தபால் தலையை பெற்றுக் கொள்ள முடியும். இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள தபால் அலுவலகம் நிழல் உலக தாதாக்களான சோட்டா ராஜன் மற்றும் முன்னா பஜ்ரங்கி ஆகியோரின் தபால் தலையை வெளயிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக தபால்துறையினை விசாரரிக்க உத்தரவிடப்பபட்டுள்ளது. இந்த நிலையில் தபால் துறை விளக்கம் அளித்துள்ளது.
அவர்கள் கொடுத்துள்ள விளக்கத்தில் , இந்த விஷயத்தில் நிபந்தனைகள் வாடிக்கையாளரால் மீறப்பட்டுள்ளதாக கூறியுள்ள தபால்துறை. விண்ணப்பத்திலும், அவர் தாக்கல் செய்த நிழற்படம் குறித்து எதையும் தெரிவிக்கவில்லை எனக் கூறியுள்ளது.
மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடைபெறுவதைத் தவிர்க்க, அனைவரும், விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தபால் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.