அணை நல்லா இருக்கு ஆய்வு செய்ய தேவையில்லை: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு

TNGovt SupremeCourt mullaiperiyardam
By Irumporai Mar 23, 2022 05:18 AM GMT
Report

உச்ச நீதிமன்றத்தில் முல்லை பெரியாறு அணை வழக்கில் கேரள அரசின் பதிலுக்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது பராமரிப்பு பணிகளை செய்யவிடாமல் கேரள அரசு வேண்டுமென்றே தடுப்பதாகவும் சரியான ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் கூறியுள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடும் வறட்சி நிலவியதால், இங்கிருந்த விவசாயிகள் பாசனத்துக்குத் தண்ணீர் கிடைக்காமல் பெரும் துன்பத்துக்கு ஆளானார்கள்.

இதனால் ஏராளமான மக்கள் உணவு பஞ்சத்தாலும் பட்டினியாலும் அவதிபட்டனர் அப்போது ஆங்கில பொறியாளர் பென்னிக் குயிக்கின் பெரும் முயற்சியால் திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு கேரள பகுதியில் முல்லை பெரியாறு அணை கட்டப்பட்டது.

முல்லை பெரியாற்றில் இருந்து கடலில் கலக்கக்கூடிய உபரிநீர், முல்லை பெரியாறு அணைக்குத் திருப்பிவிடப்பட்டது.  

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு பாசனம் அளிக்கக்கூடிய முல்லை பெரியாறு அணைக்கு எதிராக கேரளாவில் உள்ள அரசியல் கட்சியினர் மற்றும் திரைப்படக் கலைஞர்களும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக, 137 அடி உயத்துக்கு மேல் தண்ணீர் தேக்க,  கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் முல்லை பெரியாறு அணை வழக்கில் கேரள அரசின் பதிலுக்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது   பராமரிப்பு பணிகளை செய்யவிடாமல் கேரள அரசு வேண்டுமென்றே தடுப்பதாகவும்  சரியான ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் கூறியுள்ளது.

மேலும், அணை தமிழ்நாடு அரசுக்கு சொந்தமானது என்றும் அணை பாதுகாப்பாகவே உள்ளதாகவும் அணையினை ஆய்வு செய்ய சர்வதேச குழு தேவையில்லை என கூறிய தமிழக அரசு மத்திய அரசின்  நீர்வள ஆணையத்தின் ஒத்துழைப்போடு தமிழ்நாடு அரசின் குழுதான் அணையை ஆய்வு செய்யும் எனக் கூறியுள்ளது