சாதியை காரணம் காட்டி அவமதிக்கப்பட்ட பெண் - தண்ணீர் எடுக்க வந்ததால் ஆத்திரம்
கோவில் குழாயில் தண்ணீர் எடுக்கவந்த பெண்ணை இருவர் சாதியை காரணம் காட்டி அவமதித்த சம்பவம் மத்தியபி பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஹர்தாவில் பெண் ஒருவர் தன் மகளுடன், அப்பகுதியில் உள்ள கோவில் தண்ணீர் குழாயில் இருந்து தண்ணீர் எடுக்க வந்துள்ளார். அப்போது அங்கு இருந்த இரண்டு நபர்கள் அப்பெண்ணின் சாதியை சுட்டிக்காட்டி, இங்கு தண்ணீர் பிடிக்கக்கூடாது என்று கூறியுள்ளனர்.
மேலும் அப்பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி தீர்த்ததுடன், அப்பெண்ணின் மகளையும் கீழே தள்ளிவிட்டுள்ளனர்.இதையடுத்து அப்பெண், தனக்கு நடந்த அவலம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அப்பெண் உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்ததை அடுத்து, சம்மந்தப்பட்ட நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.