மெல்ல விடைகொடு விடைகொடு மனமே : பிரபல வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் ஓய்வு
தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
2004 இல் அறிமுகமான ஸ்டெய்ன், தென்னாப்பிரிக்காவுக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனை படைத்தார். 265 போட்டிகளில் 699 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தியவர்.
தென் ஆப்பிரிக்காவுக்காக 93 டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 439 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஸ்டெயின் தொடர்ச்சியான காயம் காரணமாக 2019 இல் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
இது தவிர, ஸ்டெய்ன் 125 ஒருநாள் போட்டிகளில் 196 விக்கெட்டுகளையும், 47 டி 20 போட்டிகளில் 64 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். கடந்த சில வருடங்களாக தனது உடற்தகுதி காரணமாக மிகவும் சிரமப்பட்ட ஸ்டெயின். ஐபிஎல்லில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெக்கான் சார்ஜர்ஸ் மற்றும் குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடி இருந்தார்.
Announcement. pic.twitter.com/ZvOoeFkp8w
— Dale Steyn (@DaleSteyn62) August 31, 2021
அதே போல் ஐபிஎல்லில் மொத்தம் 95 போட்டிகளில் விளையாடி 97 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த நிலையில் டேல் ஸ்டெயின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்