உலக கோப்பை போட்டியில் சூர்யகுமார் யாதவ் கவனிக்கக்கூடிய வீரராக இருப்பார் - டேல் ஸ்டெய்ன் கருத்து
சூர்யகுமார் யாதவ் குறித்து தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி வரும் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன.
ஆஸ்திரேலியா பயணம் ஆஸ்திரேலியாவில் நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட இந்திய அணி மும்மையிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது. இன்றோடு பெர்த் மைதானத்தில் இந்திய வீரர்களுக்கு பயிற்சி நிறைவடையப்போகிறது.
டேல் ஸ்டெய்ன் கருத்து
இந்நிலையில், சூர்யகுமார் யாதவ் குறித்து தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், சூர்யகுமார் யாதவ், பந்தின் வேகத்தைப் பயன்படுத்தி விக்கெட் கீப்பருக்கு பின்புறம் பந்தை விளாச விரும்புகிறார். டி20 உலகக் கோப்பையில் அவர் கவனிக்கக்கூடிய வீரராக இருப்பார் என்று தெரிவித்தார்.