முத்தமிட்ட பிறகு நாக சைதன்யா மன்னிப்பு கேட்டார் - சீக்ரெட் உடைத்த பிரபல நடிகை
நாக சைதன்யா குறித்து பிரபல நடிகை புகழாரம் சூட்டியுள்ளார்.
தக்ஷா நகர்கர்
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை சமந்தாவும், நடிகர் நாகர்ஜூனாவின் மகனும், பிரபல தெலுங்கு நடிகருமான நாக சைதன்யாவும் காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர்.
3 ஆண்டுகள் மகிழ்ச்சியாக இவர்கள் மண வாழ்க்கை சென்று கொண்டிருந்த நிலையில் இவர்களது விவாகரத்து குறித்து நீண்ட காலமாக செய்திகள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் இருந்தது. தொடர்ந்து ஷோபிதா துலிபாலாவுடன் சைதன்யா டேட்டிங் செய்து வருவதாகவும் செய்தி வெளியாகியது.
புகழாரம்
இந்நிலையில், நடிகை தக்ஷா நகர்கர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'ராவணசூரா'. இப்படத்தின் நேர்காணலில், 2022 இல் பாங்க ராஜூ படத்தில் நாக சைதன்யாவுடன் பணிபுரிந்த அனுபவத்தைப் பற்றி பேசினார்.
அதில், பெண்கள் மீது அதிக அக்கறை கொண்ட ஒரு இனிமையான மற்றும் எளிமையான மனிதர் நாக சைதன்யா என்று பாராட்டினார். மேலும், நாக சைதன்யா ஒரு காட்சியில் முத்தமிடவோ அல்லது கட்டிப்பிடிக்கவோ நேரும்போதெல்லாம் மன்னிப்பு கேட்பார். அது அவரது மரியாதைக்குரிய தன்மை எனத் தெரிவித்துள்ளார்.