அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பிரிவதாக அறிவித்த மனைவி டெய்சி
daisy announce seperation from aadhav arjuna: அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பிரிவதாக அவரது மனைவி டெய்சி மார்ட்டின் அறிவித்துள்ளார்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விவாகரத்து
தமிழ்நாட்டின் விளையாட்டு மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராக உள்ளவர் ஆதவ் அர்ஜூனா.
இவர் கடந்த 2012 ஆம் ஆண்டில் டெய்சி மார்ட்டின் என்பவரை காதல் திருமணம் செய்திருந்தார்.

டெய்சி மார்ட்டின், லாட்டரி அதிபர் சாண்டியாகோ மார்ட்டின் மற்றும் லால்குடி சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் மார்ட்டின் தம்பதியின் மகள் ஆவார்.
இந்நிலையில், தனது கணவர் ஆதவ் அர்ஜுனாவை பிரிவதாக டெய்சி மார்ட்டின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 14 ஆண்டுகளாக ஒருவருக்கொருவர் வாழ்க்கையில் இணைந்து பயணித்த நாங்கள், அன்பு, புரிதல் மற்றும் மாற்றங்கள் நிறைந்த பல கட்டங்களைக் கடந்து வந்துள்ளோம். நண்பர்களாகவும், வாழ்க்கைத்துணைகளாகவும், பெற்றோர்களாகவும் இணைந்து வாழ்ந்தோம்.

இன்று, ஆதவ் அர்ஜுனாவும் நானும் ஒரு தம்பதியாகப் பிரிந்து, தனித்தனிப் பாதைகளில் பயணிக்க முடிவெடுத்துள்ளோம். இது எங்கள் இருவருக்கும் ஒரு புதிய தொடக்கமாக இருந்தாலும், எங்கள் குழந்தையை இணைந்து வளர்ப்பதிலும், குழந்தையின் மகிழ்ச்சியையும் நலனையும் உறுதி செய்வதிலும் நாங்கள் தொடர்ந்து மிகுந்த முன்னுரிமை அளிப்போம்" என தெரிவித்துள்ளார்
. முதல்வர் விஜய்யின் மனைவி விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்து பின்னர் திரும்ப பெற்ற நிலையில், மூத்த அமைச்சரான ஆதவ் அர்ஜுனாவை அவரது மனைவி பிரிவதாக அறிவித்துள்ளது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.