உயிரிழந்த 4 மீனவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு

srilanka army dead
By Jon Jan 21, 2021 07:25 PM GMT
Report

இலங்கை கடற்படை தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்படும் 4 மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

கடந்த 18ம் தேதி நள்ளிரவு ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த மெசியா(30), நாகராஜ்(52), செந்தில்குமார்(32) மற்றும் சாம்சன் டார்வின்(28) ஆகிய 4 மீனவர்களும் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்க சென்றனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையின் ரோந்து பணியில் ஈடுபட்டபோது மீனவர்களின் படகில் மோதிவிட்டு அங்கிருந்து சென்றனர்.

இதனால் படகின் பின்பக்கம் தண்ணீர் புகுந்து 4 மீனவர்களும் நீரில் முழ்கினார் இதனையறிந்த மீன்வளத்துறையினர் 3 விசைப்படகுகளில் காணாமல் போன மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.அப்போது அந்த 4 மீனவர்களும் இறந்த நிலையில் மீட்கப்பட்டனர்.

இச்சம்பவத்திற்கு பலர் கண்டனக் குரல்களை எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் இலங்கை கடற்படை செயல் கண்டிக்கத்தக்கது என முதல்வர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும், தகுதியின் அடிப்படையில் மீனவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.