ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது: மத்திய அரசு அறிவிப்பு

rajini cinema actor Dadasaheb phalke
By Jon Apr 01, 2021 10:58 AM GMT
Report

திரைத்துறையில் சாதனை படைத்ததற்காக நடிகர் ரஜினிகாந்த்துக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய திரைத்துறையில் சிறந்த பங்களிப்பை அளித்ததற்காக நடிகர் ரஜினிகாந்திற்கு 51 ஆவது தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழக தேர்தலுக்கும் ரஜினியின் விருதுக்கும் தொடர்பில்லை என்று ஜவடேகர் தெரிவித்துள்ளார். நடிகர் திலகம் சிவாஜி, இயக்குநர் கே.பாலச்சந்தர், அமிதாப் பச்சன், வினோத் கண்ணா, லதா மங்கேஷ்கர், கன்னட நடிகர் ராஜ்குமார், கேரள இயக்குநர் ஆடூர் கோபாலகிருஷ்ணன் ஆகியோருக்கு ஏற்கனவே தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் சமயத்தில் இந்த விருது அறிவிக்கப்பட்டிருப்பதாக செய்தியாளர்கள் கேட்டபோது, ரஜினிகாந்த் திரையுலகில் சிறந்த சேவையை செய்து உள்ளார். இது அவருடைய திரைப்பட சாதனைக்கு, சேவைக்கு கொடுக்கப்பட்ட விருது. தமிழக தேர்தலுக்கும் ரஜினியின் விருதுக்கும் தொடர்பில்லை. இதை ஒப்பிட்டுப் பேசுவது தவறு என்று ஜவடேகர் தெரிவித்துள்ளார்.