நடிகர் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது - முதல்வர் பழனிசாமி, கமல்ஹாசன் வாழ்த்து!

india rajini actor flim Dadasaheb Phalke
By Jon Apr 01, 2021 01:44 PM GMT
Report

நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து, நடிகர் ரஜினிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் நடிகர் ரஜினிக்கு விருது வழங்குவது 100% பொருத்தம் என்று வாழ்த்தை டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி, தங்களது நடிப்புத் திறமைக்கும் கடின உழைப்புக்கும் கிடைத்த அங்கீகாரமாக விருது கிடைத்துள்ளது. மேலும் பல விருதுகளைப் பெற வேண்டும் என ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர், நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், “உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது உச்ச நட்சத்திரமும் என் மனதிற்கு இனிய நண்பருமான ரஜினிகாந்திற்கு அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்வளிக்கிறது. திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்த ரஜினிக்கு இந்த விருது 100% பொருத்தம்.” என்று பதிவிட்டுள்ளார்.