உணர்வு ரீதியாக என்னை அப்படம் தொட்டது - 'டாடா’ படம் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் நெகிழ்ச்சி...!
உணர்வு ரீதியாக என்னை அப்படம் தொட்டது என்று 'டாடா’ படம் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிக்பாஸ் கவின்
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் மக்களிடையே மிகவும் பிரபலடைந்தார் நடிகர் கவின். இவர் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இலங்கைப் பெண் லாஸ்லியா மீது காதல் வயப்பட்டு பல பிரச்சினைகளை சந்தித்தார். ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு இருவரும் பிரிந்துவிட்டதாக பல தகவல்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாயின.
இதனையடுத்து, பிக்பாஸ் கவின் நடிப்பில் வெளியான படம் ‘லிப்ட்’. இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு அடுத்ததாக தற்போது நடித்துள்ள படம் ‘டாடா’. இப்படத்தில், கவினுக்கு ஜோடியாக அபர்ணா தாஸ் நடித்துள்ளார்.
தற்போது வெளியாகியுள்ள இப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்துள்ளன. இப்படத்தை தமிழகம் முழுவதும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் படத்திற்கு கிடைத்துள்ள நல்ல வரவேற்பால் மகிழ்ச்சியடைந்த நடிகை அபர்ணா தாஸ் உணர்ச்சிபூர்வமான கடிதம் ஒன்றை நடிகர் கவினுக்காக எழுதியிருந்தார். நீங்கள் செய்யும் அனைத்திற்கும் ஒரு நல்ல தோழியாக நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன் என்று பதிவிட்டிருந்தார்.
நடிகர் ராகவா லாரன்ஸ் நெகிழ்ச்சி பதிவு
தற்போது ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், ‘டாடா’ படத்தை நான் பார்த்தேன். உணர்வு ரீதியாக என்னை அப்படம் தொட்டது. குடும்பத்துடன் திரையரங்கிற்கு சென்று பார்ப்பதற்கு பொருத்தமான படம். படத்தை எழுதி, இயக்கிய இயக்குநர் கணேஷ் கே.பாபுவிற்கும், சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் கவின் மற்றும் அபர்ணா தாஸ்க்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
I watched dada movie and I’m emotionally touched. A perfect family film for everyone to watch at the theatres. My best wishes to producer @ambethkumarmla sir. A well written and executed film by director @ganeshkbabu! Great performances by @Kavin_m_0431 @aparnaDasss ??
— Raghava Lawrence (@offl_Lawrence) February 16, 2023