வெட்டிய தலையுடன் காவல்நிலையம் சென்ற தந்தை மகன் - அதிர்ந்த போலீசார்
வெட்டிய தலையுடன் தந்தையும் மகனும் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
பக்கத்து வீட்டு தகராறு
மஹாராஷ்ட்டிரா மாநிலம் நாசிக்கை சேர்ந்தவர் சுரேஷ் போக் (40) இவரது அண்டை வீட்டில் குலாப் ராம்சந்திர வாக்மரே (35) என்பவர் வசித்து வந்துள்ளார். அண்டை வீட்டார் என்பதால், இரு குடும்பத்தினருக்கும் இடையே நீண்ட காலமாக தகராறு இருந்து வந்ததுள்ளது.
இந்நிலையில் கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி இருதரப்பும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
தலையுடன் சரணடைவு
இதனையடுத்து அதற்கு மறுநாள் சுரேஷ் போக் மற்றும் அவரது மகன் இணைந்து, குலாப் ராம்சந்திர வாக்மரேவை அரிவாள் மற்றும் கோடாரியால் வெட்டி கொலை செய்துள்ளனர்.
கொலை செய்த பின்னர் குலாப்பின் தலை மற்றும் கொலைக்கு பயன்படுத்திய அரிவாள் மற்றும் கோடாரியுடன் காவல்நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளனர். இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சுரேஷ் போக்கின் மகளை வீட்டை வீட்டு ஓடி செல்ல குலாப் உதவியதாகவும் இதனால் ஆத்திரத்தில் இருந்த தந்தையும் மகனும் சேர்ந்து குலாப்பை கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கொலை சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக மாநில ரிசர்வ் படை காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.