தம்பி மனைவியை கொலை செய்ய முயன்று தவறுதலாக குழந்தையை கொலை செய்த கொடூர கொளுந்தன்.!!
ராணிப்பேட்டை அருகே மனைவியின் தங்கையை கொலை செய்ய முயன்ற போது, தவறுதலாக குழந்தையின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த பெரியப்பாவை போலீசார் கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆலப்பாக்கத்தை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான கனிமொழி பிரசவத்திற்காக தனது ஒன்றரை வயது மகனுடன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். கடந்த சனிக்கிழமை இரவு 11 மணியளவில் அந்த ஒன்றரை வயது குழந்தை கதறி அழுதுள்ளது.
இதனை கேட்டு அலறி எழுந்த அவரது தாயார், குழந்தையின் தலையில் இருந்து ரத்தம், வெள்ளம் போல் வெளியேறுவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்த குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குழந்தையின் தலையில் ஏற்பட்ட காயம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கனிமொழியின் அக்கா கணவர் பிரசாந்த் வேலைக்கு போகாமல் மாமியார் வீட்டிலேயே தங்கி வந்துள்ளார்.
மேலும் அடிக்கடி குடிபோதையில் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கனிமொழியின் தங்கை கார்த்திக்கா அவ்வபோது இதனை கண்டித்துள்ளார்.
அக்கா கணவனையே இப்படி இழிவாக பேசுகிறாள் என்ற கோபத்தில், அந்த போதை ஆசாமி பிரசாந்த், கார்த்திகாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். அந்த வகையில் கடந்த சனிக்கிழமை இரவு போதையில் கார்த்திகா மீது தலையில் கல்லை போட்டு கொலை செய்ய கல்லோடு வீட்டிற்கு வந்துள்ளார்.
ஆனால், எதிர்பாராத விதமாக அந்த கல் தவறுதலாக குழந்தை தலையின் மேல் விழுந்ததில் குழந்தையின் மண்டை உடைந்துள்ளது. இதனால் பதறியடித்த அந்த போதை ஆசாமி அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
தற்போது அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், பிரசாந்த்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.