விராட் கோலியை போல் நடித்து காட்டிய டி வில்லியர்ஸ்- வைரலாகும் வீடியோ

AB de Villiers Virat Kohli video viral imitates
By Anupriyamkumaresan Sep 27, 2021 12:37 PM GMT
Report

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராட்கோலி களத்தில் வெளிப்படுத்தும் ஆக்ரோஷத்தை நட்சத்திர வீரர் ஏபிடி வில்லியர்ஸ் நடித்து காட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

14-வது ஐபிஎல் சீசனில் நேற்று நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பெங்களூரு மும்பையை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

விராட் கோலியை போல் நடித்து காட்டிய டி வில்லியர்ஸ்- வைரலாகும் வீடியோ | D Villiares Imitates Viratkohli Video Viral

இதைத் தொடர்ந்து, பெங்களூரு அணி வீரர்களிடம் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பும், பின்பும் கேப்டன் கோலி ஆற்றிய உரை, பயிற்சியாளர் மைக் ஹெஸன் பேச்சு, ஆட்டத்தில் முக்கியப் பங்காற்றிய கிளென் மேக்ஸ்வெல், யுஸ்வேந்திர சஹால் உள்ளிட்டோரது கருத்துகள் அடங்கிய விடியோவை அணி நிர்வாகம் ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியது.

இது தவிர டிரெஸ்ஸிங் அறையில் வீரர்களின் கிண்டல், கேலி அடங்கிய காட்சிகளும் அந்த விடியோவில் இடம்பெற்றுள்ளன. எதிரணியின் விக்கெட்டுகள் விழுந்தால், களத்தில் விராட் கோலியின் ஆக்ரோஷ கலந்த கொண்டாட்டம் அனைவரும் அறிந்தது.

அவர் ஆக்ரோஷம் அடைந்தால் என்ன செய்வாரோ அதை பெங்களூரு அணியின் சக வீரர் ஏபி டி வில்லியர்ஸ் மற்ற வீரர்களிடம் அப்படியே நடித்துக் காட்டியுள்ளார். இந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.