மேலயே கை வைக்குறியா? என்று கூறி கட்சிக்காரரை கன்னத்தில் அறையும் டிகே சிவக்குமார்!
மேலயே கை வைக்குறியா? என்று கூறி கட்சிக்காரரை கன்னத்தில் அறையும் டிகே சிவக்குமார் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் தலைவர் டி.கே.சிவக்குமார் நேற்று மாண்டியா பகுதியில் ஆய்வு செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த காங்கிரஸ் கட்சி நபர் ஒருவர் அவர் மீது கை போட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் ஆத்திரம் அடைந்த அவர் அந்த நபரை கன்னத்தில் அறைந்துள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இதை பலரும் பார்த்து அவரின் செயல்பாட்டை கண்டித்து வருகின்றனர். இந்தச் சூழலில் அந்த நபர் சரியாக கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாததால் தான் அவரை அறைந்ததாக டிகே சிவக்குமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த வீடியோ எடுத்த நபரை அதை அழிக்குமாறு டிகே சிவக்குமார் கேட்டு கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.