ரயிலில் பாடிய பெண்... தீவிரமாக தேடி வரும் டி இமான் - வைரலாகும் வீடியோ!

Only Kollywood D Imman Viral Video
By Sumathi Jul 19, 2022 05:30 PM GMT
Report

ரயிலில் பாடிய பெண்ணை தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி எண் இருந்தால் பகிருங்கள் என இமான் ட்வீட் செய்து தேடி வருகிறார்.

 டி இமான்

தமிழ், கன்னட, மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என தென்னிந்திய சினிமாக்களில் முன்னனியில் வலம் வருபவர் டி இமான். ஃபிலிம் ஃபேர் விருதுகள், தமிழ்நாடு மாநில திரைப்பட விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார் இமான்.

ரயிலில் பாடிய பெண்... தீவிரமாக தேடி வரும் டி இமான் - வைரலாகும் வீடியோ! | D Imman Tweet To Find Viral Singer Sings In Train

இவருக்கென தனி பட்டாளத்தையே தன் இசை மூலம் உருவாக்கியவர்.சமீபத்தில் எதற்கும் துணிந்தவன், யுத்த சத்தம், மைடியர் பூதம் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்திருந்தார். தற்போது கேப்டன், மாலை, காரி, பொய்க்கால் குதிரை,பொது, வள்ளி மயில் உள்ளிட்ட படங்களில் கமிட் ஆகியுள்ளார்.

ரயிலில் பாடிய பெண்

இவர் போராடி இந்த நிலைக்கு வந்தவர் என்பதால் தன் துறையை சார்ந்த ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு உதவுவதில் மும்முரம் காட்டி வருகிறார். இதற்கு என தனி டீமையே உருவாக்கி பாடும் திறன் கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்பு அளித்து வருகிறார் இமான்.

அந்த வகையில் சமீபத்தில் ஓடும் ரயிலில் பாடி பிரபலமான ஒரு பெண்ணை தேடி வருகிறார். ஒரு பெண் கண்ணோடு காண்பதெல்லாம் என்ற பாடலை நேர்த்தியாக பாடியிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வலம் வந்ததை தொடர்ந்து பலரும் இந்த பெண்ணுக்கு வாய்ப்பு கொடுக்க கூறி ட்வீட் செய்து வந்தனர்.

இந்நிலையில் அந்த பெண்ணை தொடர்பு கொள்வதற்காக தொலைபேசி எண் இருந்தால் பகிருங்கள் என இமான் ட்வீட் செய்துள்ளார்.