மனைவி நல்ல, நமக்குப் பிடித்த காதலியாவதில்லை - இமான் வேதனை!

Tamil Cinema D Imman
By Sumathi Jul 19, 2024 09:15 AM GMT
Report

பிடித்த காதலி மனைவியாவதில்லை.. மனைவி பிடித்த காதலியாவதில்லை என இமான் பேசியுள்ள தகவல் வைரலாகி வருகிறது.

 டி. இமான்

பார்த்திபனின் சயின்ஸ் ஃபிக்‌ஷன் மற்றும் மூட நம்பிக்கைகளுக்கு எதிரான படமாக டீன்ஸ் படம் உருவாகியுள்ளது. இதற்கு டி. இமான் இசையமைத்துள்ளார்.

d imman

இந்நிலையில் இமான் படத்துக்கும் தனக்கும் கிடைத்துள்ள அங்கீகாரத்தால் பேட்டியளித்து வருகிறார். அவ்வாறு பேட்டி ஒன்றில் பேசியுள்ள அவர், நமக்கு பிடித்த காதலி மனைவி ஆவார் என்றால் அது சந்தேகம் தான்.

விவாகரத்தால் நொறுங்கிட்டேன்; அது மட்டும் இல்லைனா என் இரங்கல் செய்தி வந்திருக்கும் - டி.இமான்

விவாகரத்தால் நொறுங்கிட்டேன்; அது மட்டும் இல்லைனா என் இரங்கல் செய்தி வந்திருக்கும் - டி.இமான்


பிடித்த காதலி

அதே போல நாம் கட்டும் மனைவி நல்ல காதலியாகவும் நமக்குப் பிடித்த காதலியாகவும் இருப்பதில்லை. நம்முடைய பிள்ளைகள் நம் செல்வம் என வளர்க்கிறோம். ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல், அது மாறிவிடுகிறது. நல்ல குழந்தைகளுக்கு நல்ல பெற்றோர்கள் அமைவதில்லை.

மனைவி நல்ல, நமக்குப் பிடித்த காதலியாவதில்லை - இமான் வேதனை! | D Imman Talks About Lover And Wife

நல்ல பெற்றோர்களுக்கு நல்ல குழந்தைகள் அமைவதில்லை. இசைத்துறையில் சாதாரண ஒரு கலைஞராக நானிருந்தாலே போதும் என நினைத்தேன்.

ஆனால், இசையமைப்பாளராக இருக்கும் வாய்ப்பை அந்த கடவுள் கொடுத்துள்ளார் எனத் தெரிவித்துள்ளார். தற்போது, மலை, பப்ளிக், வள்ளி மயில் மற்றும் பேட்ட ராப் என 4 படங்களுக்கு இமான் இசையமைத்து வருகிறார்.