காந்தக்குரலால் வைரலான அரசுப்பள்ளி மாணவி - டி இமான் போனில் அழைத்து சொன்ன குட் நியூஸ்!
காந்தக்குரலால் வைரலான அரசுப்பள்ளி மாணவிக்கு சினிமாவில் பாடுவதற்கு வாய்ப்பு தருவதாக இசையமைப்பாளர் இமான் உறுதியளித்துள்ளார்.
டி இமான்
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் டி இமான். ரஜினி, அஜித், விஜய், சூர்யா என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார். 'கண்ணான கண்ணே' என்ற பாடலுக்காக தேசிய விருதும் பெற்றுள்ளார்.
டி இமான் திறமையுள்ளவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் தாராள மனம் படைத்தவர். கண்பார்வையற்ற திரிமூர்த்தியின் கண்ணான கண்ணே பாடலை சமூக வலைத்தளங்களில் கேட்ட இமான் அவருக்கு ஒரு வாய்ப்பை கொடுத்தார்.
அந்த வகையில் சமீபத்தில் விழுப்புரம் மாவட்டம் அம்மணம் பாக்கம் கிராமத்தை சேர்ந்த 'தர்ஷினி' என்ற ஏழை அரசுப் பள்ளி மாணவி அப்பா குறித்து பாடிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது.
வைரல் மாணவி
இதனைப் பார்த்த இமான், அந்த மாணவியின் பெயர் மற்றும் தொடர்பு விவரம் கேட்டு கமெண்ட் செய்திருந்தார். இந்நிலையில் அந்த மாணவியின் செல்போன் எண் கிடைக்கவே, உடனடியாக போன் செய்து பாராட்டியுள்ளார் டி இமான்.
இது குறித்து அந்த மாணவி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசியதாவது "நான் பக்கத்து கிராமத்தில் படித்து வருகிறேன். அங்கு ஏரி வேலை செய்துகிட்டு இருந்தாங்க. நான் சும்ம பாட்டு பாட ஆரம்பித்தேன்.
அதை எல்லாரும் வீடியோ எடுத்து இன்ஸ்டாவில் போட்டுவிட்டார்கள். இதனால் நான் வைரலானேன். எனது குரலை இமான் சார் கேட்டுவிட்டு போனில் அழைத்தார். அப்போது அப்பாதான் பேசினார். எனக்கு பாடுவதற்கு ஒரு வாய்ப்பு கொடுப்பதாக சொன்னார். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது" என அந்த மாணவி கூறினார்.