12 ஆண்டுகள் உன்னோடு வாழ்ந்ததே வேஸ்ட்... டி.இமானை சரமாரியாக திட்டிய முதல் மனைவி
இசையமைப்பாளர் டி.இமான் 2வது திருமணம் செய்த நிலையில் அவரது முதல் மனைவி வெளியிட்ட பதிவு ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவரான டி.இமான் மோனிகா ரிச்சர்ட் என்பவரை கடந்த 2008ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்ட நிலையில் இந்த தம்பதியினருக்கு வெரோனிகா, பிளெஸிகா என இரு மகள்கள் உள்ளார். இதனிடையே கடந்தாண்டு இறுதியில் இருவரும் விவாகரத்து பெற்றனர்.
இதனைத் தொடர்ந்து கடந்த மே 15 ஆம் தேதி அமலி உபால்டு என்பவரை 2வதாக டி.இமான் திருமணம் செய்துக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே கலந்துக் கொண்டனர். தனது மறுமணம் குறித்து முகநூலில் பதிவிட்ட டி.இமான் தனது முதல் மனைவியின் இரு மகள்களின் வருகைக்காக காத்திருப்பதாக குறிப்பிட்டார்.
Dear @immancomposer, happy married life. #SingleMomstrong #TamilCinema #Indiaglitz #DImman #vikatan #tamilmovies #tamilnews pic.twitter.com/xATB1eJH8n
— Monicka Richard (@MonickaRichard) May 15, 2022
இந்நிலையில் இமானின் முதல் மனைவி மோனிகா ரிச்சர்ட் அவரின் இரண்டாவது திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் கடுமையாக விமர்சித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ட்விட்டரில் மோனிகா வெளியிட்ட பதிவில், “டியர் டி.இமான், உங்கள் இரண்டாம் திருமணத்திற்கு வாழ்த்துகள். உங்கள் வாழ்க்கையில் 12 வருடம் இருந்த ஒருவரை இவ்வளவு விரைவாக மாற்ற முடியும் என்றால் உங்களை போன்ற ஒருவருக்காக நேரத்தை வீணடித்தது என்னுடைய முட்டாள்தனம். அதற்காக வருத்தப்படுகிறேன்.
கடந்த இரண்டு வருடங்களாக உங்கள் சொந்த குழந்தைகளை நீங்கள் பார்க்கவும், கவனிக்கவும் இல்லை. தற்போது அவர்களுக்கும் மாற்று கண்டுப்பிடித்துவிட்டீர்களா? எது நடந்தாலும் என் குழந்தைகளை அவர்கள் அப்பாவிடம் இருந்து நான் பாதுகாப்பேன். தேவைப்பட்டால் புது குழந்தையையும் பாதுகாப்பேன். திருமண வாழ்த்துகள்” என கடுப்புடன் பதிவிட்டுள்ளார். இந்த விவகாரம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.