முன்னாள் மனைவி மீது பொய் வழக்கு... - சர்ச்சையில் சிக்கிக் கொண்ட டி. இமான் - ரசிகர்கள் அதிர்ச்சி
பிரபல இசையமைப்பாளரான டி.இமான் கடந்த 2008ம் ஆண்டு மோனிகா ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்தார்.
இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் டி.இமான் தன் மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவிப்பு ஒன்றை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டார். இந்த விவாகரத்து அறிவிப்பை பார்த்து ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இரண்டு மகள்கள் உள்ள நிலையில் மோனிகாவை முறைப்படி விவாகரத்து செய்தார். இதையடுத்து தன் பெற்றோரின் கோிக்கையை ஏற்று இரண்டாவது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்.
மே 15ம் தேதி, பிரபல கலை இயக்குனர் உபால்டுவின் மகள் எமிலி என்பவரை டி இமான் திருமணம் செய்து கொண்டார். இத்திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்த சிலரும் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், முன்னாள் மனைவி மீது இமான் பொய் புகார் கூறியதாக மோனிகாவின் தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதாவது தனது குழந்தைகளை வெளிநாடு அனுப்புவதற்காக பாஸ்போர்ட் தொலைந்து போனதாக பொய் கூறி புது பாஸ்போர்ட் வாங்கியுள்ளதாக இமான் தெரிவித்திருந்தார்.
இதற்கு மோனிகா மறுப்பு தெரிவித்துள்ளாராம். இமான் பாஸ்போர்ட் தொலைந்து போனதாக கூறி பாஸ்போர்ட் கொடுக்க மறுத்த காரணத்தால் தான் புது பாஸ்போர்ட்டுக்கு பதிவு செய்துள்ளதாகவும், மோனிகாவிற்கு இமான் எந்த வித ஜீவனாம்சம் கொடுக்கவில்லையாம். பிள்ளைகளின் செலவுக்கு மட்டும் ரூ. 5000 தருவதாக புகார்களும், குற்றச்சாட்டுகளும் தற்போது எழுந்துள்ளது.

அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan