12 வருடம் என் நேரத்தை வீணடித்த நான் ஒரு முட்டாள்... - டி.இமானை வெச்சு விளாசிய முன்னாள் மனைவி - ரசிகர்கள் ஷாக்

D. Imman
1 மாதம் முன்

பிரபல இசையமைப்பாளரான டி.இமான் கடந்த 2008ம் ஆண்டு மோனிகா ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்தார்.

இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் டி.இமான் தன் மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவிப்பு ஒன்றை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டார். இந்த விவாகரத்து அறிவிப்பை பார்த்து ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இரண்டு மகள்கள் உள்ள நிலையில் மோனிகாவை முறைப்படி விவாகரத்து செய்தார். இதையடுத்து தன் பெற்றோரின் கோிக்கையை ஏற்று இரண்டாவது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்.

மே 15ம் தேதி, பிரபல கலை இயக்குனர் உபால்டுவின் மகள் எமிலி என்பவரை டி இமான் திருமணம் செய்து கொண்டார். இத்திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்த சிலரும் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், 2ம் திருமணம் செய்துக் கொண்ட டி.இமானை, முன்னாள் மனைவி மோனிக்கா ரிச்சர்டு கடுமை விமர்சனம் செய்து டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர், "டியர் டி. இமான், இரண்டாவது திருமணத்திற்கு வாழ்த்துக்கள். 12 ஆண்டுகள் உங்களுடன் சேர்ந்து வாழ்ந்த ஒருவரை இவ்வளவு சீக்கிரம் மாற்றிவிட முடியும் என்றால் உங்களை போன்ற நபருடன் என் நேரத்தை வீணடித்த நான் ஒரு முட்டாள் என நினைக்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக உங்களின் சொந்த பிள்ளைகளையே நீங்கள் பார்க்கவும் இல்லை, கவனிக்கவும் இல்லை. ஆனால் அவர்களுக்கு பதிலும் ஒருவரை கண்டுபிடித்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. உங்கள் அப்பாவிடம் இருந்து என் பிள்ளைகளை நான் பாதுகாப்பேன். தேவைப்பட்டால் அந்த புது குழந்தையையும் நான் பாதுகாப்பேன். திருமண வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

2ம் திருமணம் செய்துக் கொண்டுள்ள டி.இமானை அவரது முன்னாள் மனைவி கடுமையாக சாடி பதிவிட்டுள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியிலும், சினிமா வட்டாரத்திலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

12 வருடம் என் நேரத்தை வீணடித்த நான் ஒரு முட்டாள்... - டி.இமானை வெச்சு விளாசிய முன்னாள் மனைவி - ரசிகர்கள் ஷாக் | D Imman2nd Marriage


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.