'என் வீட்டுக்கு வந்த புது உறவு....’ - இமானின் முன்னாள் மனைவி போட்ட பதிவு - ஷாக்கான ரசிகர்கள்
பிரபல இசையமைப்பாளரான டி.இமான் கடந்த 2008ம் ஆண்டு மோனிகா ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
சமீபத்தில் டி.இமான் தன் மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவிப்பு ஒன்றை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டார். இந்த விவாகரத்து அறிவிப்பை பார்த்து ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இரண்டு மகள்கள் உள்ள நிலையில் மோனிகாவை முறைப்படி விவாகரத்து செய்தார். இதையடுத்து தன் பெற்றோரின் கோிக்கையை ஏற்று 2வது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்.
கடந்த மே 15ம் தேதி, பிரபல கலை இயக்குனர் உபால்டுவின் மகள் எமிலி என்பவரை டி இமான் திருமணம் செய்து கொண்டார். இத்திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்த சிலரும் பங்கேற்றுள்ளனர்.
இதற்கிடையில், 2ம் திருமணம் செய்துக் கொண்ட டி.இமானை, முன்னாள் மனைவி மோனிக்கா ரிச்சர்டு கடுமை விமர்சனம் செய்து டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
அந்த பதிவில், 12 ஆண்டுகள் உங்களுடன் சேர்ந்து வாழ்ந்த ஒருவரை இவ்வளவு சீக்கிரம் மாற்றிவிட முடியும் என்றால் உங்களை போன்ற நபருடன் என் நேரத்தை வீணடித்த நான் ஒரு முட்டாள் என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் மோனிகா இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் -
எனது புதிய குடும்ப உறுப்பினர்கள் குறித்த தகவலை ஷேர் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். மே 20ம் தேதியான இன்று இரண்டு Dalmatians நாய்களை வீட்டிற்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
என்னுடைய கடினமான காலங்களில் எனக்கு தூணாக இருந்த எனது அப்பாவுக்கு எப்போதும் நன்றி கடன்பட்டுள்ளேன்.
கடந்த சில ஆண்டுகளாக நானும் என் குடும்பத்தினரும் பட்ட வேதனைக்கு இந்த செல்லப்பிராணிகள்தான் மருந்து. இந்த செல்ல பிராணிகளான லியா மற்றும் மியா எனக்கு கிடைக்க துணையாக இருந்த என் குடும்பத்தினருக்கும் என் நலம் விருப்பிகளுக்கும் நன்றி.
இந்த நாய்கள் இனி மேல் என் 3வது மற்றும் 4வது மகள்களாக இருப்பார்கள். மேலும் அவர்களுக்கு அம்மாவாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.
இதுவரை உண்மையான அன்பையும் சந்தோஷத்தையும் பெறாத எனக்கும் எனது மகள்களுக்கும் இது உண்மையிலேயே சந்தோஷத்தை தரும். என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் #dimman #GodBless என்ற ஹேஷ்டேக்கையும் குறிப்பிட்டுள்ளார். மோனிகாவின் இந்த பதிவை பார்த்த அவரது ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.
தற்போது சமூகவலைத்தளங்களில் இந்த டுவிட் வைரலாகி வருகிறது.


ஈரானில் பயங்கரம் : பயணிகளுடன் சென்ற விமானத்திற்கு ஏற்பட்ட நிலை : சரிந்து விழுந்த விமான கூரை பாகங்கள் IBC Tamil
ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தில் விரைவில் கைதாகப்போகும் கோட்டாபய! நீதிமன்றத்தில் அம்பலமான தகவல் IBC Tamil
இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட சாரா உள்ளிட்ட குழு! விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரின் துல்லிய தகவல் IBC Tamil